சட்டப்பேரவையில் தொழிற்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய பாஜக எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன், பள்ளியை முடிக்கும் போது மாணவர்களிடம் என்ன திறன் உள்ளது என்பதை கண்டறிந்து, அதற்கேற்ப வேலைவாய்ப்பை உருவாக்கிக்கொள்ளும் வகையில் அவர்களை வழி நடத்திட வேண்டும் என்றும் கூறினார். தன் மனைவிக்கு ஒரு சேலை, ஜாக்கெட் தைப்பதற்கு ரூ.1,700-ஐ கட்டணமாக வாங்கிவிட்டார்கள் என்றும், தையல் & எம்ப்ராய்டரி கலையையெல்லாம் ஏன் ஒரு படிப்பாக கொண்டு வந்து, மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தரக்கூடாது? என்றும் கேள்வி எழுப்பினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | குழாய் மூலம் நேரடியாக வீடுகளுக்கே இயற்கை எரிவாயு...தமிழக அரசு


பெண்களின் உடலில் உடை எங்கே இருக்கிறது என்று தேட வேண்டியது வருத்தமாக இருக்கிறது. தற்போது பிரபலமாக உள்ள ஊ சொல்றியா ஊ ஊ சொல்றியா என்பதெல்லாம் என்ன மாதிரியான பாடல் என்று கேள்வி எழுப்பி, இது போன்ற பாடல் வரிகளால் 50 வருடங்களுக்கு பின்னால் வருவோர், இதுதான் நம் முன்னோர்களின் கலாச்சாரமாக இருந்ததாக எண்ணிவிடமாட்டார்களா என்றும், இப்போது வரும் ஆலுமா டோலுமா போன்ற பாடல் வரிகளை புரிந்து கொள்வதற்கு இந்தி படித்துவிட்டா அர்த்தம் தேட முடியும் என்றும் கேள்வி எழுப்பினார்.



அப்போது குறுக்கிட்டு பேசிய அதிமுக எம்.எல்.ஏ., பொள்ளாட்சி ஜெயராமன், சேலை, ஜாக்கெட் தைப்பதற்கு இவ்வளவு ஆகின்றது என்பது நயினாருக்கு எப்படி தெரிந்தது என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய நயினார் நாகேந்திரன், தனது மனைவி தைக்க கொடுத்த துணியை வாங்க செல்லும் போது இதையெல்லாம் தெரிந்து கொண்டதாக தெரிவித்தார். எனவே இதுபோன்ற சூழலில், நமது தொன்மையான பண்பாட்டை நாம் போற்றிப் பேணிக்காக்க வேண்டும் என்றும் எம்.எல்.ஏ., நயினார் நகேந்திரேன் வலியுறுத்தினார்.


மேலும் படிக்க | ரயில் எஞ்சினில் விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் - கலக்கும் தென்னக ரயில்வே


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR