குழாய் மூலம் நேரடியாக வீடுகளுக்கே இயற்கை எரிவாயு...தமிழக அரசு

தமிழ்நாடு முழுவதும் 2 கோடிக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயு வழங்கும் திட்டம் ரூ.35 ஆயிரம் கோடி செயல்படுத்தப்படும் என தொழிற்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Written by - Chithira Rekha | Last Updated : Apr 19, 2022, 03:25 PM IST
  • குழாய் மூலம் நேரடியாக வீடுகளுக்கே இயற்கை எரிவாயு
  • தொழில்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல்
  • 8 ஆண்டுகளில் பணிகள் நிறைவடையும்
குழாய் மூலம் நேரடியாக வீடுகளுக்கே இயற்கை எரிவாயு...தமிழக அரசு   title=

தமிழக தொழில்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் பெட்ரோலியம் & இயற்கை எரிவாயு குழாயமைப்பு திட்டத்தை எண்ணெய் நிறுவனங்களும், நகர எரிவாயு விநியோகத் திட்டத்தை மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களும் செயல்படுத்துவதை உறுதிபடுத்தும் முகமையாக செயல்பட டிட்கோ(TIDCO) நியமிக்கப்பட்டுள்ளதாகவும், மாநிலம் முழுவதும் தற்போது நடைபெற்று வரும் 5 பெரிய PNG குழாய் அமைப்பு திட்டங்களின் அமலாக்கத்தை டிட்கோ கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பின்படி, தமிழகத்தில் இயற்கை எரிவாயு குழாய் அமைக்கும் திட்டத்தை இந்தியன் ஆயில் நிறுவனமும், கெயில் நிறுவனமும் மேற்கொண்டு வருகின்றன. 1,224 கி.மீ., நீளத்திற்கு இந்தியன் ஆயில் நிறுவனமும், 319 கி.மீ., நீளத்துக்கும் கெயில் நிறுவனமும் இயற்கை எரிவாயு குழாய் அமைத்து வருகிறது. 

மேலும் படிக்க | ஓசூரில் புதிய பன்னாட்டு விமான நிலையம்: தமிழக அரசு தகவல்

இதே போன்று, பெட்ரோலிய பொருட்களுக்கான குழாய் அமைப்பு திட்டத்தை HPCL நிறுவனம் 700 கி.மீ. நீளத்துக்கும், பாரத் பெட்ரோலிய கார்ப்பரேசன் நிறுவனம் 320 கி.மீ. நீளத்துக்கும், கொச்சின் - சேலம் பைப்லைன் பிரைவேட் நிறுவனம் 210 கி.மீ. நீளத்துக்கும் செயல்படுத்தி வருவதாகவும், இதன் மூதலீடு ரூ.14,200 கோடியாக உள்ளதாகவும் தொழிற்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில அளவில் நகர எரிவாயு விநியோகத் திட்டத்துக்கான வரைவு கொள்கையை டிட்கோ தயாரித்துள்ளதாகவும், நகர எரிவாயு விநியோக வலையமைப்பை, மாநிலத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் செயல்படுத்த அனுமதி பெற்றுள்ள 7 CGD நிறுவனங்களுடன், டிட்கோ ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாகவும், 2,785 விற்பனை நிலையங்களில் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவும், 22,794,795 வீடுகளுக்கு குழாயின் மூலம் இயற்கை எரிவாயுவும் வழங்குவதற்கான இத்திட்டம், ரூ.35,000 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும் என்றும், இந்த பணி 8 ஆண்டுகளில் நிறைவடையும் என்றும் தொழிற்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | CUET நுழைவுத் தேர்வுக்கு எதிராக தீர்மானம்..தமிழக சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றம்

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News