கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் கடந்த 1998-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்புகளில் உயிரிழந்தவர்களுக்கு இந்து அமைப்புகள் சார்பில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்பினர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உயிரிழந்தவர்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் மேடையில் உரையாற்றிய அண்ணாமலை, “ ராஜிவ் காந்தி கொலை செய்யபடும் முன்பு திமுக ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டது. உளவுத்துறை அறிக்கை மீது திமுக அன்று கவனம் செலுத்தவில்லை. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கோட்டை ஈஸ்வரன் கோவில் சம்பவம் நடந்த போது ஆட்சியில் இருந்தவர்கள் தான் திமுக. தேர்தலில் எத்தனை தோல்விகளை சந்தித்தாலும் மாறப்போவதில்லை. இதை நாம் உணரும் போதுதான் மக்களுக்கான ஆட்சி நடக்கும். கோவை தொடர் குண்டுவெடிப்பில் 58 பேர் உயிரிழந்துள்ளனர். 250 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் 6 இஸ்லாமியர் உயிரிழந்து உள்ளனர். இந்த கூட்டம் மதரீதியான கூட்டம் இல்லை, தீவிரவாதிகளுக்கு எதிரான கூட்டம் தான் இது. இன்று கோவை ஆபத்தில் இருந்து தப்பித்து விட்டதா? என்றால் இன்னும் தப்பவில்லை.


மேலும் படிக்க | தேசிய சிலம்பப் போட்டியில் பதக்கம் வென்ற எண்ணூர் மாணவர்கள்!


தமிழ்நாடு இன்னும் ஆபத்தில் இருந்து தப்பவில்லை. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த சம்பவம் தற்கொலை படை தாக்குதல் என்றோம். ஆனால் சிலிண்டர் விபத்து என இவர்கள் என சொல்லுகிறார்கள். உயிரிழந்த முபின் வீட்டில் 130 பொருட்கள் கிடைத்தது. இதை பார்த்த பிறகும் இது சிலிண்டர் விபத்து என்று காவல் துறை சொல்லுகிறது. சம்பவம் நடந்து 1 வருடம் 4 மாதம் கழித்து 4 முறை சோதனை செய்துள்ளது என்.ஐ.ஏ . 15 பேர் கைது செய்துள்ளனர். இன்னும் சிலிண்டர் விபத்து என்கிறார்கள். கோவை மாவட்டத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் தேர்தல் தான் 2024 நாடாளுமன்ற தேர்தல். 


குண்டு வெடிப்பு வழக்கில் 150 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இப்பொழுது 16 பேர் சிறையில் உள்ளனர். அவர்களை வெளியே விட ஆட்சி செய்த கட்சியும், ஆட்சியில் உள்ள கட்சியும் விடுவிக்க வலியுறுத்தி வருகிறார்கள். உச்சநீதிமன்றம் இவர்களுக்கு பெயில் கொடுக்க கூடாதுன்னு சொல்லிருக்கிறது. ஆனால் இவர்களை விடுதலை செய்ய அரசியல் கட்சியினர் சொல்கிறார்கள். தேர்தல் நேரத்தில் இவர்களின் நாடகத்தை ஒழிக்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ் மேடையில் அரசியல் பேசக்கூடாது. ஆனால் இன்று நான் பேசியாக வேண்டிய சூழலில் உள்ளேன். 


பாராளுமன்ற வேட்பாளர்களின் முதல் வேலை இங்கு நினைவு துண் கட்டுவது தான். வருகின்ற தேர்தலில் பாஜக உறுப்பினரை வெற்றி பெற செய்ய வேண்டும். திமுகவிற்கும் தீவிரவாதிகளுக்கும் தொடர்பில்லை என சொல்ல முடியாது. திமுகவில் வெற்றி பெற்ற மக்கள் பிரதிநிதி இல்லத்தில் காவல்துறை சோதனை நடைபெற்றுள்ளது. எஸ்.டி.பி.ஐ கட்சியினருடன் கூட்டணி வைக்கிறார்கள். அவர்கள் யார்? அவர்களுக்கும் பாப்புலர் பிராண்ட் அமைப்பிற்கும் என்ன தொடர்பு?. வலிமையான நாட்டை உருவாக்க பாஜக வேண்டும்” எனத் தெரிவித்தார்.


மேலும் படிக்க | ஈஷா மஹாசிவராத்திரி விழா நேரலைக்கு ஏற்பாடு: புதுவை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்ப்பு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ