அதிமுகவுக்கு டெபாசிட் தேறாது, 39 தொகுதிகளில் பாஜக வெற்றி உறுதி - பாஜக நிர்வாகி
BJP Pon Balaganapathi About AIADMK in Nagapattinam : நாகையில் பேசிய பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் பொன்.வி.பாலகணபதி, நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், அ.தி.மு.க ஒரு இடத்தில் கூட டெபாசிட் வாங்காது என தெரிவித்துள்ளார்.
BJP Pon Balaganapathi About AIADMK in Nagapattinam : நாகப்பட்டினத்தில் பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் பொன்.வி.பாலகணபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் பாஜக தலைமையிலான கூட்டணி 39 தொகுதிகளிலும் வெற்றி பெறும், அதிமுகவுக்கு டெபாசிட் கிடைக்காது என தெரிவித்தார். மதவாத அரசியலை தூண்டுவது காங்கிரஸ் கூட்டணியே என்றும் குற்றம் சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், " ராஜஸ்தானில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி சிறுபான்மையினருக்கு எதிராக பேசியதாக ஒரு தோரணைகளை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் பேசி வருகின்றனர். இதை பா.ஜ.க முற்றிலும் நிராகரிக்கிறது.
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கடந்த 2006-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பேசியது தெளிவான பிறகு, இந்தியாவில் அனைத்து சொத்துக்களுக்கும் சிறுபான்மையின சகோதரர்களுக்கு முழுமையான பங்கு இருக்கிறது என்ற விவாதமானதை பிரதமர் மோடி தெளிவாக கூட்டத்தில் எடுத்துரைத்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் பொருளாதார ரீதியாக, ஜாதிய ரீதியாக கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் இஸ்லாமிய சகோதரர்களுக்கு இதுவரை இருந்த நடைமுறைகள் மாற்றப்பட்டு புதிதாக தொழில் தொடங்க எந்தவித பிணையும் இன்றி வங்கிகளில் கடன் வழங்கப்படும் என்றும், சிறுபான்மையின சகோதரர்கள் பொருளாதாரம், சுகாதாரம், அரசு போன்றவைகளில் முழுமையாக பங்களிப்பு வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | வாக்காளர் பெயர் நீக்கம்... மீண்டும் வாக்களிக்க வாய்ப்பு வழங்க கோரிக்கை..!!
மேலும் அரசு ஒப்பந்தங்கள் உள்ளிட்டவைகளும் வழங்கப்படும் என்று போலியான விஷயத்தையெல்லாம் கூட சொல்லி, இதுவரை சமமின்மையாக இருந்ததை, சமப்படுத்தப்படும் என்று கூறி மக்களிடத்தில் போலியான வகுப்பு வாத, மத வாத அரசியலை தூண்டியது காங்கிரஸ் கூட்டணியாகும். பிரதமர் மோடி பொருளாதார ரீதியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என கூறி வருகிறார். ஒவ்வொரு இந்திய குடிமகனும் எவ்வளவு சொத்து வைத்துள்ளார்கள் போன்றவைகள் கணக்கெடுத்து வைத்து, அதன் அடிப்படையில், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கும் வாதத்தைதான் தெளிவாக கூறி உள்ளார்களை தவிர, வெறுப்பு அரசியலுக்காகவோ, மற்ற எந்தவித காரணங்களுக்காகவும் பிரதமர் பேசவில்லை என்று நாங்கள் தெளிவாக கூறிக்கொள்கிறோம்.
தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். மக்கள் தேடிச்சென்று பா.ஜ.க வேட்பாளர்களுக்கு ஓட்டளித்துள்ளனர். தி.மு.க கூட்டணிக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியும் காத்திருக்கிறது. தேர்தல் முடிவில் ஒரு இடத்தில் கூட அ.தி.மு.க.வுக்கு டெபாசிட் கிடைக்காது. இரு கட்சிகளும் தமிழகத்தில் மாற்றத்தையும், அதிர்ச்சியையும் உணர போகிறார்கள்" என பாலகணபதி கூறினார்.
மேலும் படிக்க | வருமானத்துக்கு அதிகமாக ரூ.20 லட்சம் சொத்து... பஞ்சாயத்து கிளர்க் வீட்டில் ரெய்டு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ