திமுக - காங்கிரஸ் கூட்டணி


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காங்கிரஸ் கட்சியின் முக்கிய கூட்டணியாக திமுக உள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலிலேயே ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முதன்முறையாக அறிவித்த கட்சி திமுக. இப்போதும் தேசிய அளவில் இந்தியா கூட்டணியை ஒருங்கிணைப்பதிலும் திமுக முக்கிய பங்காற்றி வருகிறது. தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாஜக அரசை மத்தியில் இருந்து அகற்றுவதே முதல் இலக்கு என்று அறைகூவல் விடுத்திருப்பதுடன் அதற்கான பணிகளை மேற்கொண்டும் இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் பாஜகவை கொள்கை ரீதியாகவும் திமுக கடுமையாக எதிர்க்கும் கட்சியாக தேசிய அளவில் முன்னணியில் இருக்கிறது.


கடும் அதிருப்தியில் பாஜக


இவையெல்லாம் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜகவுக்கு கடும் அதிருப்தியை கொடுத்திருக்கிறது. எப்படியாவது திமுகவுக்கு அரசியல் ரீதியாக கடும் நெருக்கடியை கொடுக்க வேண்டும் என்று பல்வேறு அசைமென்டுகளை ஒரே நேரத்தில் கட்டவிழ்த்துவிட்டுள்ளது. அரசியல் ரீதியாக சனாதன தர்மம் குறித்து திமுக பேசியது இந்திய அளவில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. இதனை தமிழகத்தைக் காட்டிலும் வட இந்தியாவில் தீவிரமாக பாஜக அரசியல் செய்து வரும் நிலையில், நிர்வாக ரீதியாக ரெய்டுகளையும் முடுக்கிவிட்டுள்ளது. 


மேலும் படிக்க | உதயநிதி தலைக்கு விலை... அவர் போலி சாமியாராக தான் இருக்க வேண்டும் - அண்ணாமலை அதிரடி!


முக்கிய தலைவர்களுக்கு குறி


திமுகவின் முக்கிய புள்ளிகள் மற்றும் அமைச்சர்களின் தொழில் முதலீடுகள் குறித்து மத்திய அரசு தீவிரமாக கண்காணித்து வைத்திருகிறது. அவர்கள் செய்யும் பணப்பரிமாற்றம் உள்ளிட்டவைகளைக் கண்காணித்து வைத்திருக்கும் டெல்லி மேலிடம், அடுத்தடுத்து ரெய்டுகளை இறங்க முடிவெடுத்திருக்கிறது. ஏற்கனவே செந்தில் பாலாஜி அசைன்மென்ட் நல்ல ரிசல்டை கொடுத்திருக்கும் நிலையில், அடுத்ததாக துரைமுருகனை ரேடாரில் கொண்டு வந்திருக்கிறது பாஜக மேலிடம். அதனால் தான் அவர் பொறுப்பு வகிக்கும் நீர்வளத்துறையில் இப்போது ரெய்டு சுழன்றடித்துக் கொண்டிருக்கிறது.


தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் ரெய்டு நடைபெறுவதுடன், வெளிநாட்டு பணப்பரிவர்த்தனைகள் குறித்த பட்டியல் குறித்து விசாரிக்கப்பட இருக்கிறதாம். இதனை துரைமுருகன் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்? என திமுகவினரே உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். அவர் மட்டுமல்லாமல் மற்ற திமுக முக்கிய புள்ளிகளுக்கும் இனி நெருக்கடி அதிகரிக்கும் என அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது. 


மேலும் படிக்க | “பொய், புரட்டு, திட்டமிட்ட அவதூறு” என பாஜகவின் திசைதிருப்பும் தந்திரத்தை முறியடிப்பீர் -முதல்வர்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ