தமிழகத்தில் பலமான கூட்டணியை பாஜக அமைக்கும் -அமித்ஷா!
தமிழகத்தில் மகா வெற்றி பெறும் அளவிற்கு பலமான கூட்டணியை பாஜக அமைக்கும் என அக்கட்சி தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்!
தமிழகத்தில் மகா வெற்றி பெறும் அளவிற்கு பலமான கூட்டணியை பாஜக அமைக்கும் என அக்கட்சி தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்!
ஈரோடு வந்துள்ள அமித்ஷா நெசவாளர்கள் மத்தியில் பேசினார். அப்போது பாஜக தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய விஷயங்கள் குறித்து நீங்களும் கருத்து தெரிவிக்கலாம். பொது தேர்தலில் மோடி தலைமையிலான அணி வெற்றி பெற உறுதி ஏற்க வேண்டும். மக்களின் பங்களிப்போடு ஆட்சி நடத்த வேண்டும் என்பதே பாஜக-வின் நோக்கம் என தெரிவித்தார்.
பொதுமக்களின் ஒவ்வொரு தேவை அறிந்து தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது என தெரிவித்த அமித்ஷா, மக்களின் தேவைகளை கேட்டு அறிந்து அதனை தேர்தல் அறிக்கையில் இணைக்க உள்ளோம் என தெரிவித்தார்.
அந்தவகையில் தற்போது விசைத்தறி, கைத்தறி நெசவாளர்களின் தேவைகளை அறிந்து கொள்ள வந்துள்ளேன். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பின்னடைவை சந்தித்த நெசவு தொழிலை, மீட்க கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. தமிழகத்தில், ஜவுளித்துறைக்காக மத்திய அரசு ரூ.1,230 கோடி ஒதுக்கி உள்ளது.
எனினும் தமிழகத்தில் கூட்டணி அமைத்திருக்கும் திமுக- காங்கிரஸ் கட்சிகள்., மக்களின் முன்னேற்றத்தை தடுத்து வருகிறது. இக்கூட்டணி முன்னேற்றத்திற்கான கூட்டணி அல்ல, ஊழல் கூட்டணி என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும், அதற்கான வலுவான கூட்டணியை பாஜக அமைக்கும் எனவும் அவர் குறிப்பிட்டு பேசினார்.
அமித்ஷா-வை தொடர்ந்து கூட்டத்தில் பேசிய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள், வரும் லோக்சபா தேர்தலுக்கு பின்னர் எதிர்கட்சிகளே இல்லாத அளவிற்கு பாஜக வெற்றி பெறும் எனவும், தமிழகத்தில் அமையும் கூட்டணியால், எதிர்கட்சிகளே இருக்காது என தெரிவித்தார்.