AIADMK BJP Alliance: பாஜக, அதிமுக கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை இருவரும் தொடர்ந்து வார்த்தை மோதலில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. அண்ணாமலை கடந்த ஏப். 2ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசும்போது,"அகில இந்திய தலைவர்கள் நன்றாக யோசனை செய்துவிட்டு தான் கூட்டணி குறித்து முடிவெடுக்கிறார்கள்.  மாநில தலைவராக என்னுடைய கருத்தை அமித்ஷாவிடம் கூறியிருக்கிறேன். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவர் அதிமுக கூட்டணியில் பாஜக இருக்கிறது என்று கூறினாரே தவிர கூட்டணியை உறுதி செய்யவில்லை. தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் இருக்கும் போது கூட்டணி குறித்து முதலுரையும் முடிவுரையும் எழுத முடியாது. முடிந்தால் தான் கூட்டணி கட்சி உறுதியாகிவிட்டது என்று கூற முடியும்" என்று பேசியிருந்தார். இந்த கருத்து சற்று சலசலப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அவரது கருத்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்கும் வகையில் பேசியிருந்தார். 


மேலும் படிக்க | அமித் ஷா சொன்னார் முன்னே... இபிஎஸ் உறுதிசெய்தார் பின்னே... அப்போ அண்ணாமலை?


அதாவது,"மத்தியில் பாஜக ஆளும் கட்சியாக உள்ளது. கூட்டணியை பொறுத்தவரையில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் தான் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். மாநிலத்தில் இருக்கிறவர்கள் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. மத்தியில் இருக்கிறவர்கள் கூட்டணி தொடரும் என்று சொல்லியிருக்கிறார்கள்" என்றார். 


இந்தநிலையில் அதிமுக பாஜக கூட்டணி குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது, "கட்சி வளர்ச்சி என்பது தான் நம்முடைய அடிப்படை கொள்கை. நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து டெல்லியில் உள்ள தலைவர்கள் தான் இறுதியான முடிவு எடுப்பார்கள். அந்த முடிவிற்கு மாநில தலைமை கட்டுப்படும். 


பாஜக, அதிமுக கூட்டணியில் தான் இருக்கிறோம். இதை தான் நானும் அமித்ஷாவும் சொல்கிறோம். ஈரோடு கிழக்கு தேர்தலில் மட்டுமே அதிமுக தலைமை. மக்களவைத் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியா என்பது தலைமை தான் முடிவெடுக்கும். தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைமை பாஜகதான்" என்றார். 


மேலும், பிரதமர் மோடி வரும் ஏப். 8ஆம் தேதி தமிழகம் வருகை தருகிறார். அவரின் வருகையையொட்டி, இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பில் தனித்தனியாக பிரதமரை சந்திக்க நேரம் கேட்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


மேலும் படிக்க | பிட் படம் ரிலீஸ் செய்தவர் அண்ணாமலை! விளாசிய காயத்திரி ரகுராம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ