புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் திமுக சார்பில் இன்றிரவு நாஞ்சில் சம்பத்தை நடுவராகக் கொண்ட பட்டிமன்றத்தில் கலந்துகொள்வதற்காக வந்திருந்த நாஞ்சில் சம்பத், அங்குள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் தங்கி இருந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை அண்மையில் தகாத வார்த்தைகளால் பேசிய நாஞ்சில் சம்பத்தை கண்டித்து பாஜக பிரமுகர் ரமேஷ் தலைமையில் அக்கட்சியினர் விடுதி அருகே நேற்று மாலை கருப்புக் கொடிகளுடன் திரண்டனர். மேலும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மோடி ஒழிக என்ற கோஷத்தை சாலையின் மறுபுறம் நின்று கொண்டிருந்த திமுகவினர் எழுப்பினர். 


மேலும் படிக்க | அதிமுகவை யார் வழிநடத்த வேண்டும்... சசிகலா சொல்வது என்ன?


இதனால் போலீசார் செய்வதறியாது திக்குமுக்காடிப் கயிறுகளைக் கொண்டு சாலையில் பாதுகாப்பை ஏற்படுத்தினர்.


இருதரப்பினர் இடையே வாக்குவாதம் முற்றியது போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டு இருந்தது இருதரப்பினரிடையே சண்டைகள் வந்துவிடக்கூடாது என்று போலீசார் குவிக்கப்பட்டனர்.


மேலும் பாஜக கட்சியினருக்கும் திமுக வினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.இந்நிலையில் லாட்ஜில் இருந்து கீழே இறங்கி வந்த நாஞ்சில் சம்பத் காரில் ஏற முற்பட்டபோது வாட்டர் பாட்டிலை கொண்டு பாரதிய ஜனதா கட்சியினர் அவர் மீது எரிந்த நிலையில் அவர் அமரும் இருக்கையில் பாட்டில் வந்து விழுந்தது. 


இரு தரப்பினரிடமும் பேசிக் கொண்டிருந்த நிலையில் நாஞ்சில் சம்பத் பத்திரமாக காரில் ஏற்றி விழாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டார் தொடர்ந்து இரு தரப்பினர் இடையே கல்வீச்சு சிறிதுநேரம் நடைபெற்றதை போலீசார் தடுத்து நிறுத்தினர் தொடர்ந்து பாஜகவினர் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.


பின்னர் அனுமதியின்றி  சாலையில் மறியல் போராட்டத்தில்  20 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு  தனியார் மன்டபத்திற்க்கு  அழைத்துச்செல்லப்பட்டனார் இதனால்  புதுக்கோட்டை சாலையில் சுமார் ஒரு மணி நேரம்  போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


மேலும் தற்போது சாலை மறியலில் ஈடுபட்ட 25 பேரை அறந்தாங்கி போலீஸார் கைது செய்தனர்.


மேலும் படிக்க | தீர்ப்புக்கு பிறகு எடப்பாடியில் சசிகலா எடுத்த சபதம்... ஆதரவாளர்கள் ஆரவாரம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR