சென்னை: ‘வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றுங்கள்’:மத்திய அரசை கண்டித்து திமுக போராட்டம் அறிவிப்பு! "மக்கள் விரோத - ஜனநாயக விரோத ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து, 20-09-2021 அன்று திமுக தலைமையிலான அனைத்து கூட்டணிக் கட்சிகளின் சார்பில், இல்லங்களில் கறுப்புக்கொடி ஏந்திக் கண்டனப் போராட்டம்" - திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

செப்டம்பர் மாதம் 20ம் தேதியன்று காலை 10  மணிக்கு  திமுக தொண்டர்கள், நிர்வாகிகள் அனைவரும், பிற கட்சியினருடன் இணைந்து தங்கள் வீட்டின் முன்பு கருப்புக் கொடி ஏந்தி கண்டனப் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று திமுக பொதுச் செயலாளர் கேட்டுக் கொண்டுள்ளார. 


இது தொடர்பாக துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில், “மத்திய பாஜக அரசை கண்டித்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் வரும் 20ம் தேதி கண்டன போராட்டம் நடைபெறும்” என்று தெரிவித்துள்ளார்.



காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் கடந்த மாதம் 20ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில், பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான மத்திய அரசின் மக்கள் விரோத -ஜனநாயக விரோத நடவடிக்கையை கண்டித்து நாடு முழுவதும் செப்டம்பர் 20ம் தேதி முதல் 30ம் தேதிவரை பல்வேறு போராட்டங்களை நடத்த ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.  


Also Read | சமூக நீதி நாள்! பெரியாரின் தேவை என்ன?!


அதன்படி திமுக தலைமையில் அனைத்து கூட்டணி கட்சிகள் சார்பிலும் தமிழகத்தில் வரும் 20ம் தேதி கண்டன போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ள துரைமுருகன், “அன்றைய தினம் காலை 10  மணிக்கு  திமுக தொண்டர்கள், நிர்வாகிகள் மாற்றுக் கட்சி தோழர்களுடன் இணைந்து தங்கள் இல்லம் முன்பு கருப்புக் கொடி ஏந்தி கண்டனப் போராட்டத்தில் ஈடுபட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.


காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் கடந்த மாதம் காணொலி காட்சி வாயிலாக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அந்த கலந்தாலோசனைக் கூட்டத்தில்,  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பரூக் அப்துல்லா, மெகபூபா முஃப்தி, ஹேமந்த்சோரன், சரத்யாதவ், சீதாராம் யெச்சூரி, டி.ராஜா, திருமாவளவன், தேஜஸ்வி யாதவ்  உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


19 கட்சிகள் பங்கேற்ற இக்கூட்டத்தில்,பாரதிய ஜனதா அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து - செப்டம்பர் 20 முதல் 30 ஆம் தேதி வரை, நாடு தழுவிய போராட்டம் நடத்துவது,  மூன்று வேளாண் சட்டங்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும் உட்பட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | பள்ளி மாணவரை அடித்துக் கொன்ற தாயின் கள்ளக் காதலன்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR