வடசென்னையில் குத்துச்சண்டை மைதானம் - முதலமைச்சர் அறிவிப்பு
வடசென்னையில் குத்துச்சண்டை மைதானமும், அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கென்று தனி மைதானமும் அமைக்கப்படுமென முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று நடந்தது. இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 110 விதியின் கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டார்.
சட்டப்பேரவையில் பேசிய அவர், “அறிவு சொத்து போல் உடல் வலிமையும் ஒரு சொத்து; விளையாட்டு உடலை துடிப்புடன் வைத்துள்ளது. தமிழக வீரர்கள் பன்னாட்டு போட்டிகளில் பங்கேற்க ஊக்குவிக்கப்படுவர்.
அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் ரூ.3 கோடி செலவில் சிறு விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்படும். ஒலிம்பிக் தங்கம் தேடுதல் திட்டம் ரூ.25 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது; சென்னை அருகே மெகா விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட உள்ளது.
மேலும் படிக்க | தூத்துக்குடியிலும் நிலக்கரி தட்டுப்பாடு - மின்வெட்டு அதிகரிக்கும் அபாயம்
சென்னை ஓபன் டென்னிஸ் தொடரை மீண்டும் நடத்த, பீச் வாலிபால் போட்டியை நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்மூலம் புதிய முதலீடுகளும் தொழில் வளர்ச்சியும் ஏற்படும்.
மதுரை, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கென பிராமாண்ட மைதானம் அமைக்கப்படும். வட சென்னையில் 10 கோடி ரூபாய் செலவில் குத்துச் சண்டை மைதானம் அமைக்கப்படும்” என்றார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR