Brahmin Sangam Request To All Parties: வரும் 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் அனைத்துக் கட்சிகளிலும் பிராமண சமூக வேட்பாளர்கள் மூவர் போட்டியிட வாய்ப்பு அளிக்க வேண்டும் என பிராமணர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. சென்னை அசோக் நகரில் இந்திய ஜனநாயக கட்சியின் தலைமை அலுவலகம் செய்யப்பட்டு வருகிறது. இதில் அனைத்து பிராமணர் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் நிர்வாகிகள் கூட்டமைப்பு இன்று நடைபெற்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த கூட்டத்தில் அகில பாரதீய ப்ராஹ்மண மஹாசங் தமிழ்நாடு மாநிலத் தலைவர் நடுவை வெ. பிரேம்சாகர் தலைமையில் நடைபெற்றது. அதில் மாவட்ட மகளிரணி செயலாளர், மாவட்ட பொதுச் செயலாளர் உள்ளிட்ட பிராமண சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


மேலும், இந்த கூட்டத்திற்கு பிறகு பாரதீய ப்ராஹ்மண மஹாசங் தமிழ்நாடு மாநிலத் தலைவர் நடுவை வெ. பிரேம்சாகர் ஒருங்கிணைப்பில் இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனத்தலைவரும், மக்களவை உறுப்பினருமான பாரிவேந்தரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது பிராமணர்களின் முக்கிய கோரிக்கைகள் இவை முன்வைக்கப்பட்டது.


மேலும் படிக்க | Udhayanidhi Stalin: ராமர் கோவில் வருவது பிரச்னை இல்லை... இதனால் திமுக எதிர்க்கிறது - உதயநிதி பளீச்


அவை,"தேசிய மற்றும் மாநில பிராமணர் நல வாரியம் ஒன்னாம் தேதி மத்திய மற்றும் மாநில அரசுகளால் அமைக்கப்பட வேண்டும்; பொருளாதாரத்தில் பின் தங்கிய முற்பட்டவர்களுக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டினை தமிழகத்திலும் அமல்படுத்த வேண்டும்; ஹிந்து சமய அறநிலையத்துறை ஆலயங்களில் நீதிமன்ற ஆலோசனையின் அடிப்படையில் தக்கார் நியமனத்தில் பிராமணர் சமூகத்தில் தகுதியானவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்; வருகின்ற 2024 மக்களவை தேர்தலில் அனைத்துக் கட்சிகளிலும் பிராமண சமூக வேட்பாளர்கள் மூவர் போட்டியிட வாய்ப்பு போன்ற நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தங்களது கோரிக்கைகளாக முன்வைத்தனர். 


பின்னர் அவர்களது கோரிக்கையை கேட்ட பாரிவேந்தர் ஐஜேகே கட்சி சார்பில் இவற்றை நிறைவேற்ற முயற்சி மேற்கொள்வதாக உறுதி அளித்தார். இதனையடுத்து இந்த சந்திப்பு குறித்து பிராமணர் சங்கம் அகில பாரதீய ப்ராஹ்மண மஹாசங் தமிழ்நாடு மாநிலத் தலைவர் நடுவை வெ. பிரேம்சாகர் கூறுகையில், "பாரிவேந்தர் எங்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாகவும் ஐஜேகே கட்சி சார்பில் எங்களுக்கு சலுகைகள் வழங்கிட உறுதுணையாக இருப்பதாக தெரிவித்தார்" என்றார்.


வடகலை - தென்கலை


முன்னதாக காஞ்சிபுரம் தேவராஜ பெருமாள் கோவிலின் தேவராஜ சுவாமி பார்வேட்டைக்கு வரும்போது வடகலை தென்கலை சார்ந்த பிரிவினர் திவ்ய பிரபஞ்சம் பாடி வருவது தொண்டு தொட்டு வருகிறது. வடகலை - தென்கலை பிரிவினர்களுக்கு இடையே  பல ஆண்டுகளாக திவ்ய பிரபஞ்சம் யார் முதலில் பாடுவது என்ற பிரச்சனை இருந்து வருகிறது.. இது தொடர்பாக உச்சநீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து நீதிமன்றங்களும் வழக்கு பல ஆண்டு காலமாக நிலுவையில் உள்ளது. 


அந்த வகையில், இன்று இரு தரப்பில் வாக்குவாதத்தை கைக்கலப்பு வரை கொண்டு சென்றனர். ஒருவரை ஒருவர் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தொடர்ந்து பக்தர்கள் முதல் பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். 


மேலும் படிக்க | Good News: விரைவில்.. அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவு திட்டம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ