சென்னை: புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் விவேக், இன்று காலை சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த அதிர்ச்சித் தகவலை அவரது உறவினர் ஒருவர் உறுதி செய்தார். நடிகர் விவேக்கின் உடல் வீட்டிற்கு கொண்டு செல்லப்படுகிறது. விருக்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.


புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் விவேக், நேற்று காலை மாரடைப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி கலமானார்.


Also Read | நடிகர் விவேக்கின் மாரடைப்புக்கு தடுப்பூசி காரணமல்ல, மருத்துவமனை அறிக்கை


இரு தினங்களுக்கு முன்னர் தான் நடிகர் விவேக், கொரோனா தடுப்பூசியின் முதல் டோசை போட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், தான் தனியார் மருத்துவமனயில் தடுப்பூசியை போடுவதை விட அரசு ஏற்பாடு செய்திருக்கும் மையத்தில் போட்டுக் கொண்டதாக தெரிவித்தார்.


அரசின் கொரோனா தடுப்பு முயற்சிகளை ஊக்குவிக்கும் வகையில் விவேக் பிரச்சாரம் செய்துவந்தார் என்பதும் குறிப்பிடத்தகக்து. 


இந்த நிலையில், நடிகர் விவேக் (Actor Vicek) சிகிச்சை பலனின்றி அதிகாலை 4.35 மணிக்கு உயிரிழந்ததாக செய்தி வந்திருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


நேற்று நடிகர் விவேக்கின் உடல் நிலையைப் பற்றி அறிக்கை வெளியிட்ட மருத்துவமனை, கொரோனா தடுப்பூசியால் மாரடைப்பு ஏற்படவில்லை என்று கூறியுள்ளது. அவருக்கு கொரோனா தொற்றும் இல்லை என்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. 


ALSO READ: குழந்தைகளை குறிவைக்கும் உருமாறிய கொரோனா: தமிழகத்தில் ஒரே நாளில் 256 குழந்தைகள் பாதிப்பு


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR