கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ள நிலையில், பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள தமிழக அரசு தொடர்ந்து மெகா தடுப்பூசி முகாம்களை நடத்தி வருகிறது. தடுப்பூசி செலுத்தி கொள்ள தமிழக அரசு சார்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் கோவையை சேர்ந்த பிரியாணி கடை உரிமையாளர் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு அசத்தல் ஆபர் வழங்கி அசைவ பிரியர்களை ஆச்சரியபடுத்தி உள்ளார். அதன்படி சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள தனது உணவகத்தில் மட்டன் மற்றும் சிக்கன் பிரியாணி, சில்லி சிக்கன் உள்ளிட்ட உணவு வகைகளை இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு 50 சதவீத தள்ளுபடியில் வழங்கி வருகிறார். இதனால் அவரது கடையில் குவிந்த பொதுமக்கள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திய சான்றுகளை காண்பித்து பிரியாணியை   ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.


ALSO READ | சென்னை: ரெம்டெசிவரை பதுக்கியவர்கள் உட்பட 409 பேர் மீது குண்டர் சட்டம்


இது குறித்து கடை உரிமையாளர் ஜெமிருல்லா கூறுகையில், பொதுமக்கள் தடுப்பூசி இட்டுக்கொள்வதனை ஊக்கப்படுத்த இந்த 50 சதவீத தள்ளுபடி முயற்சியை மேற்கொண்டதாகவும் பிரியாணி மட்டுமின்றி அனைத்து உணவு வகைகளையும் இரண்டு தவணை தடுப்பூசி போட்டவகளுக்கு வழங்குவதாகவும் தெரிவித்தார். இந்த விழிப்புணர்வு நிகழ்வு பலரது கவனத்தை ஈர்த்தது மட்டுமின்றி பாராட்டுகளையும் பெற்றுள்ளது.


ALSO READ | ஒமிக்ரானுக்கு எதிராக மற்றொரு தடுப்பூசி..! ஆய்வில் தகவல்


ALSO READ | Omicron: இதுவரை ஒமிக்ரான் தொற்றில்லாத 11 மாநிலங்கள்..! எவை?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR