சென்னை: ரெம்டெசிவரை பதுக்கியவர்கள் உட்பட 409 பேர் மீது குண்டர் சட்டம்

சென்னையில் ரெம்டெசிர்வர் மருந்து பதுக்கி விற்பனை செய்தவர்கள் உட்பட 409 பேர் கடந்த ஆண்டு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 2, 2022, 03:41 PM IST
சென்னை: ரெம்டெசிவரை பதுக்கியவர்கள் உட்பட 409 பேர் மீது குண்டர் சட்டம் title=

சென்னை பெருநகர மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குற்றச்செயல்களை தடுக்கவும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையிலும் காவல்துறை தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில் கொலை, கொலை முயற்சி குற்றங்களில் ஈடுபடுபவர்கள், திருட்டு, செயின் பறிப்பு, சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மற்றும் போதைப் பொருட்கள் கடத்துபவர்கள், கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு மிரட்டி பணம் பறிப்பவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ALSO READ | ஜனவரி 5-ல் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை

மேலும், நில அபகரிப்பு, ஆபாச வீடியோ தயாரிப்பு, மணல் கடத்தல், உணவு பொருட்கள் கடத்தல், பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள், கொரோனா நோய் பாதிப்பில் உயிர்காக்கும் மருந்துகளை பதுக்கி விற்பவர்கள் ஆகியோர் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு குண்டர் தடுப்புக்
காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகின்றனர். 

இந்நிலையில், இத்தகைய குற்றங்களில் ஈடுப்பட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கை ஒன்றை சென்னை காவல்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த ஆண்டில் சென்னை பெருநகரத்துக்குட்பட்ட பகுதிகளில் கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றங்களில் ஈடுபட்ட 253 குற்றவாளிகள், திருட்டு, சங்கிலி பறிப்பு, வழிப்பறி மற்றும் பணமோசடி குற்றங்களில் ஈடுபட்ட 96 குற்றவாளிகள், சைபர் குற்றம் சார்ந்த வழக்குகளில் ஈடுபட்ட 19 குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ALSO READ | புத்தாண்டை முன்னிட்டு இரவு குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 147 வழக்குகள் பதிவு

கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனை செய்த 29 பேர், உணவு பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேர், கொரோனா சிகிச்சைக்கு அளிக்கப்படும் ரெம்டெசிவர் மருந்தை பதுக்கி வைத்து விற்ற 4 பேர், பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட இருவர் உள்ளிட்ட மொத்தம் 409 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News