2018-19ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த பட்ஜெட் குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்கள் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.


அந்த வகையில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை, பட்ஜெட் கூறித்து கூறுகையில், அருண் ஜெட்லி தாக்கல் செய்துள்ள பட்ஜெட் ஆரோக்கியமான பட்ஜெட் என்று கூறியுள்ளார். இந்த பட்ஜெட் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கான பட்ஜெட் இல்லை, அதானியோ, அம்பானியோ மட்டும் பயன் அடையப்போவதில்லை. சிறு குறு தொழிலுக்கு உதவி செய்யும் என்று கூறினார்.


விவசாயிகளுக்கு கடன் அட்டை கொடுப்பது போல், மீனவர்களுக்கு கடன் அட்டை கொடுக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


பட்ஜெட்டில் பெண்களுக்கு சலுகை கொடுக்கப்பட்டுள்ளது. தனி நபர் வருமானத்தில் ரூ. 40000 வரிக்கழிவு கொடுக்கப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கு சலுகை கொடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.