தூத்துக்குடி அண்ணா நகர் 3-வது தெருவில் குடியிருந்து வந்த முத்துராமன் என்பவர் மாநகராட்சி கழிப்பறையில் பணியாற்றி வருகின்றார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இவரது மனைவி காளியம்மாள்(47) இந்த தம்பதியினரின் ஒரே மகளான கார்த்திகா(21) இவருக்கு திருமணமாகி 9-மாத கர்ப்பிணியாக இருக்கின்றார்.


இந்நிலையில் நேற்று முன் தினம் கார்த்திகாவிற்கு வளைகாப்பு நடத்தி தூத்துக்குடி அண்ணா நகரில் உள்ள தங்களது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர்.


இந்நிலையில் இரவு தூங்கி கொண்டிருந்தபோது தாங்கள் வசித்து வந்த பழமையான வீடு இடிந்து விழுந்ததில் தாய் காளியம்மாள், மற்றும் மகள் கார்த்திகா ஆகியோர் இடர்பாடுகளில் சிக்கி பலியாகினர். கணவர் முத்துராமன் என்பவர் காயத்துடன் உயிர் தப்பினார்.


மேலும் படிக்க | ராணிப்பேட்டை: மகன் தற்கொலை செய்துகொண்ட விரக்தியில் பெற்றோரும் தூக்கிட்டு தற்கொலை!


சம்பவம் அறிந்து விரைந்து வந்த தென்பாகம் காவல்துறையினர் உயிரிழந்த தாய் மற்றும் மகளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயம் அடைந்ந்த முத்துராமனை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்


மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தூத்துக்குடியில் வீடு இடிந்து விழுந்ததில் 9-மாத நிறைமாத கர்ப்பிணி மற்றும் அவரது தாய் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தி உள்ளது.


மேலும் படிக்க | 25 வயது பெண்ணை மணந்து வைரலான 45 வயது விவசாயி தற்கொலை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR