ஓட்டப்பிடாரம் அருகே கோவில் கொடை திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைப்பெற்றது. இதில் சீறிப்பாய்ந்து சென்ற காளைகளை மக்கள் ஆர்வத்துடன் ரசித்துப் பார்த்தனர். வெற்றிபெற்றவர்களுக்கு செல் போன்கள் பரிசாக வழங்கப்பட்டன.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே முப்புலிவெட்டி  கிராமத்தில் ஸ்ரீ சந்தன மாரியம்மன், ஸ்ரீ உச்சி மகாகாளியம்மன், ஸ்ரீ முத்தாரம்மன், கோவில் கொடை விழாவை முன்னிட்டு பூஞ்சிட்டு, தேன்சிட்டு, தட்டான்சிட்டு என ஐந்து பிரிவுகளாக மாட்டுவண்டி எல்லகை பந்தயம் நடைபெற்றது. 


இதில் பூஞ்சிட்டு மாட்டு வண்டி போட்டியில் 30 மாட்டு வண்டிகளும், தேன் சிட்டு மாட்டு வண்டி போட்டியில் 19 மாட்டு வண்டிகளும் தட்டான் சிட்டு மாட்டு வண்டி போட்டியில் 32  -மாட்டு  வண்டிகள் கலந்து கொண்டன. போட்டிகளை ஊர் நாட்டாமை முத்துவேல், மற்றும் சி.பி.எம் ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் சண்முகராஜ், ஆகியோர் தொடங்கி துவக்கி வைத்தார்.



மேலும் படிக்க | இன்று முதல் நடைமுறைக்கு வரும் இ-பாஸ்! எளிதாக பெறுவது எப்படி?


5-மைல் தூரம்   நடைபெற்ற பூஞ்சிட்டு மாட்டு வண்டி போட்டியில் முதல் பரிசை ஓட்டப்பிடாரம் ஊராட்சி மன்ற தலைவர் இளையராஜா, முகிலா ராமச்சந்திரன், மாட்டு  வண்டியும், 2-வது பரிசை குறுக்குச்சாலை சகுந்தலா தேவி பஞ்சர் கடை , மாட்டு வண்டியும், 3-வது நாயினார்புரம் திலிப் ஊராட்சி மன்ற தலைவர், மாட்டு வண்டியும், 4 பரிசு வரதராஜபுரம் முருகப்பெருமாள் மாட்டு வண்டியும் வெற்றி பெற்றது.


இதனை தொடர்ந்து நடைபெற்ற 4-மைல் தூரம் தேன்சிட்டு மாட்டு வண்டி போட்டியில் தேனி மாவட்டம் கூடலூர் வன ரோஜா,மாட்டுவண்டி முதலிடத்தையும், 2-வது தேனி மாவட்டம் கம்பம் பிரதாப்,மாட்டு வண்டியும், 3-வது துரைச்சாமிபுரம் ரமேஷ் ஆடியோஸ் வண்டியும் 4வது தேனி மாவட்டம் மார்க்கையன்கோட்டை தமிழ்ச்செல்வி மாட்டு வண்டியும் பிடித்தன.


தட்டான் செட்டு போட்டியில் முதல் பரிசை தேனி மாவட்டம் சிறை பாறை வெண்டி முத்தையா,மாட்டு வண்டியும் 2-வது பரிசை மேட்டூர் அழகர் பெருமாள் மாட்டு வண்டியும், 3 -வது தெற்கு வண்டானம் வடக்குவா செல்வி அம்மன் மாட்டு வண்டியும்,பிடித்தன


பந்தயத்தை  ஏராளமான பொதுமக்கள் சாலையின் இருபுறங்களில் நின்று கண்டு ரசித்தனர். பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றிபெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கும், மாட்டு வண்டி ஓட்டிய சாரதிகளுக்கும் செல் போன் மற்றும் பரிசு தொகை வழங்கப்பட்டது.


மேலும் படிக்க | கடன் தொல்லையால் பக்கத்து வீட்டு பெண்ணை கொலை செய்த இளைஞர்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ