கடந்த 18 ஆம் தேதி நடைபெற்ற மக்களவையின் இரண்டாம் கட்டத்தேர்தலில், தமிழகத்தில் 38 நாடாளுமன்ற தொகுதிக்கும், 18 சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தலும் நடந்து முடிந்தது. மேலும் காலியாக உள்ள சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டபேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் இந்த மாதம் 19 ஆம் தேதி நடைபெற விருக்கின்றன. அதாவது மொத்தம் 22 சட்டசபை தொகுதி என ஒரு மினி சட்டசபை தேர்தலை தமிழகம் எதிர்கொண்டு உள்ளது. தேர்தலுக்கான முடிவுகள் அடுத்த மாதம் 23 ஆம் தேதி வெளியாக உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இடைத்தேர்தல் நடைபெற உள்ள நான்கு தொகுதிக்கான வேட்பு மனுதாக்கல் கடந்த மாதம் 22 ஆம் தேதி தொடங்கி 29 ஆம் தேதி வரை நடைபெற்றது. இன்று மாலை 3 மணி வரை வேட்புமனுக்களை திரும்ப பெறாலம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து இன்று 4 தொகுதிக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது. அதில், 


சூலூர்: மொத்தம் 22 பேர் போட்டியிடுகின்றனர்.


அரவக்குறிச்சி: மொத்தம் 63 பேர் போட்டியிடுகின்றனர்.


திருப்பரங்குன்றம்: மொத்தம் 37 பேர் போட்டியிடுகின்றனர்.


ஒட்டப்பிடாரம்: மொத்தம் 15 பேர் போட்டியிடுகின்றனர்.


மொத்தம் 4 தொகுதிகளில் 137 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அனைத்து கட்சிகளும் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நான்கு தொகுதிகளில் தீவிர பிரசாரத்தை மேற்கொண்டு உள்ளனர்.