காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது - மத்திய அரசு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
செப்.30-ம் தேதி காவிரி தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அக்டோபர் 4-ம் தேதிக்குள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என உத்தரவிட்டது. காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான குழுவில் இடம்பெற்ற நிபுணர்கள் காவிரி நீர்ப்பாசனப் பகுதியை முழுமையாக ஆராய்ந்து வரும் 6-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், மத்திய அரசு சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியாது. காவிரி மேலாண்மை வாரியத்தை நாடாளுமன்ற சட்டத்தின் வாயிலாகவே அமைக்க முடியும் என கூறி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுவரை தமிழகத்திற்கு எவ்வளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது என்ற முழு விபரத்தை நாளை தெரிவிக்க கர்நாடக அரசுக்கு சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பி டத்தக்கது.