கொரோனா வைரஸை கட்டுப்படுத்த கடுமையான முயற்சி எடுத்து வருகிறோம் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் சென்னையைத் தாண்டி மாவட்ட அளவிலும் கொரோனா தொற்று பரவுவதை அடுத்து, தமிழகத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முதல்வர் பழனிசாமி மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் ஆரம்பித்தவுடன் மார்ச் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர், படிப்படியாக ஊரடங்கு தொடர்ந்து 5 கட்டங்களாக நீட்டிக்கப்பட்டு வருகிறது. தற்போதைய ஊரடங்கு வரும் ஜூன் 30 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது.


இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி கூறுகையில்... நாளை முதல் 30 ஆம் தேதி வரை மண்டலத்துக்குள் போக்குவரத்து ரத்து செய்யப்படும். மேலும், அனைத்து மாவட்டங்களின் எல்லையும் நாளை முதல் 30 ஆம் தேதி வரை மூடப்படுகிறது. இந்நாட்களில் அனைத்துவிதமான போக்குவரத்தும் ரத்துச் செய்யப்படுகிறது. மாவட்டத்தை விட்டு மாவட்டம் சென்றால் E-பாஸ் பெற வேண்டியது கட்டாயம் என தெரிவித்துள்ளார்.


READ | மின்கட்டண சலுகை அளிக்க மறுக்கும் CM கலால் வரியை உயர்த்தியுள்ளார்: MKS


மேலும் அவர் கூறுகையில், கொரோனா பரவலை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். கொரோனா தொடர்பாக பிரதமருடன் 6 முறை, ஆட்சியர்களுடன் 7 ஆலோசனை நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் 75,000 படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் குணமடைவோர் விகிதம் அதிகரித்து வருகிறது. கார், பைக் உள்ளிட்ட தனியார் வாகன போக்குவரத்தும் ரத்து செய்யப்படுகிறது. 


சென்னையில் குறுகலான தெருக்களில் அதிகளவில் மக்கள் வசிக்கின்றனர். நாளை முதல் வரும் 30 ஆம் தேதி வரை மண்டலத்திற்குள் போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது. இந்த நாட்களில் அனைத்து விதமான போக்குவரத்திற்கும்  தடை செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.