சிறைக்குச் செல்ல அடம்பிடித்த கஞ்சா குற்றவாளி... டியூப் - லைட் சாப்பிட்டதால் பரபரப்பு!
காவல் நிலையத்தில் டியூப்லைட் சாப்பிட்ட கஞ்சா குற்றவாளியால் பரபரப்பு
சேலம் மாநகராட்சியில் கஞ்சா விற்பனையைத் தடுக்க மாநில காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மாநகரில் கடந்த சில நாட்களாக கஞ்சா விற்பனை செய்பவர்களை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து வருகின்றனர். அதன்படி சேலம் அம்மாபேட்டை நாம மலைப் பகுதியைச் சேர்ந்த ரவுடியான அருண்(30) என்பவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அந்தப் பகுதியில் கஞ்சா பதுக்கி விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து அருணை காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக தயார் நிலையில் இருந்தபோது, கழிவறைக்கு செல்லப்போவதாக அருண் கூறியுள்ளார். அப்போது திடீரென கழிவறையில் இருந்த டியூப் லைட்டை உடைத்து சாப்பிட்டு, கையில் குத்திக் காயம் ஏற்படுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் உடனடியாக அருணை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறைக்குச் செல்லும்போது அருண் செய்த இந்த செயலால் குழம்பிப் போயுள்ள காவல்துறையினர், தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் போலீஸார் வட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | ‘ஆப்ரேசன் கஞ்சா 2.O’ 45 கிலோ கஞ்சா, 1400 போதை மாத்திரை....சிக்கியது மாஃபியா கும்பல்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR