நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே வசிப்பவர் வெற்றிவேல். இவர் டூவீலர் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். இவருக்கு ஞாயிற்றுக்கிழமை காலை செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் சேலம் சாலையில் காரில் செல்லும் பொழுது, ஹெல்மெட் அணியாததால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்திருப்பதாக, பரிவான் ஆப் குறுஞ்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அதில் வெற்றிவேலின் வீட்டு முகவரி, கார் எண் உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | கோடி கணக்கில் கட்டப்படும் செந்தில் பாலாஜியின் புதிய வீடு! அதிகாரிகள் சோதனை!


இதில் வேடிக்கை என்னவென்றால் வெற்றிவேல் கடந்த ஒரு வார காலமாகவே வெளியில் எங்கும் செல்லாமல், காரை தனது வீட்டின் வெளியிலேயே நிறுத்தி வைத்துள்ளார். இந்த நிலையில் சேலம் நகர போக்குவரத்து காவல் துறையினர் மூலம் இந்த அபராத தொகை குறுஞ்செய்தி எதன் அடிப்படையில் தனக்கு அனுப்பப்பட்டது?, இதன் பின்னணியில் உள்ள காரணங்கள் என்ன என புரியாமல் வெற்றிவேல் குழப்பத்தில் ஆழ்ந்தார்.இதுகுறித்து பாதிக்கப்பட்ட வெற்றிவேல் கூறும் பொழுது கடந்த ஒரு வார காலமாகவே என்னுடைய காரை நான் எங்கும் எடுத்துச் செல்லவில்லை. வீட்டிலேயே தான் கார் நிற்கிறது. அப்படி இருக்கும் பொழுது இந்த அபராத தொகை எதன் அடிப்படையில் விதிக்கப்பட்டுள்ளது என்பது எனக்கு புரியவில்லை என கூறினார். 


மேலும், பொதுவாக கார் ஓட்டுநர்கள் சீட் பெல்ட் அணியவில்லை, இன்சூரன்ஸ் இல்லை என பல்வேறு விதங்களில் அபராத விதித்து கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு போடவேண்டிய ஹெல்மெட்டுக்கான அபராத தொகையை, கார் ஓட்டுநர் ஹெல்மெட் அணியவில்லை எனக் கூறி அபராதம் விதித்திருப்பது எனக்கு மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது என அவர் கூறினார். செல்லாத ஊருக்கு, போகாத பயணத்திற்கு நான் ஏன் ஆயிரம் ரூபாய் அபராத தொகை கட்ட வேண்டும்?, போக்குவரத்து போலீசாரின் மெத்தன போக்கால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி உள்ளதாக வெற்றிவேல் தெரிவித்துள்ளார். போலீசாரின் அலட்சியப் போக்கால் கார் ஓட்டுநர்  ஹெல்மெட் அணியவில்லை எனக்கூறி சேலம் டிராபிக் போலிஸ் தரப்பில் அனுப்பப்பட்ட குறுஞ்செய்தி தற்போது  சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க | செந்தில்பாலாஜி வீட்டில் வருமானவரி சோதனை: சிபிஐ விசாரணைகோரிய மனு தள்ளுபடி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ