விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த கார்கள் தடுத்து நிறுத்தம்!
உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த 18 கார்களை தேர்தல் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த விஜய் மக்கள் இயக்கத்தை செய்த 18 கார்களை தேர்தல் அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஊரக உள்ளாட்சி தேர்தல் தேர்தலில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தாட்டி மானபல்லி ஊராட்சியில் வார்டு உறுப்பினர் பதவிக்கு ஏழுமலை என்பவரும் வீரி செட்டிபல்லி ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ராஜ்குமார் என்பவரும் போட்டியிடுகின்றனர்.
ஏழுமலை, ராஜ்குமார்க்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்ய நேற்று காலை தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், வேலூர் மாவட்ட நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் குடியாத்தம் - சித்தூர் சாலையில் நேற்று ஒரே நேரத்தில் 20 க்கும் மேற்பட்ட கார்களில் வாக்கு சேகரிக்க சென்றுகொண்டிருந்தனர்.
இதுபற்றி அறிந்த குடியாத்தம் ஊராட்சி ஒன்றிய தேர்தல் அதிகாரி மற்றும் போலீசார் விரைந்து சென்று தாட்டி மானபல்லி கிராமம் அருகே தளபதி விஜய் மக்கள் இயக்கத்தினர் சென்ற காரை நிறுத்தி விசாரித்தனர். அப்போது உரிய அனுமதியில்லாமல் செல்வதாக கூறி 18 கார்களை தேர்தல் அதிகாரி மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தினர். சுமார் இரண்டு மணி நேரத்திற்குப்பின் பிரச்சாரத்துக்கு அந்த கார்களின் விபரங்களை சேகரித்து கொண்டு அனுப்பினர்.
மேலும் கார்களில் உரிய அனுமதியின்றி பிரச்சாரத்திற்கு வந்தது குறித்து பரதராமி போலீசில் புகார் செய்யப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ALSO READ அதிமுகவின் கோரிக்கையை ஏற்பதாக தமிழக அரசு உறுதி!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR