சசிகலாவுக்கு ஆதரவாக கூட்டம் கூட்டிய 80 பேர் மீது வழக்குப்பதிவு
சசிகலாவுக்கு ஆதரவாக கூட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தூத்துக்குடி: தூத்துக்குடியில் உள்ள விளாத்திகுளத்தில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் செயல்பாட்டாளர்கள் என சுமார் 80 பேர் கலந்துக்கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட கட்சியின் பொதுச் செயலாளர் வி கே சசிகலாவுக்கு ஆதரவாக 11 தீர்மானங்களை நிறைவேற்றினர்.
அதிமுக (AIADMK) கட்சியின் முன்னாள் தொழிற்சங்க செயலாளரும் மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளருமான எம் கே ரூபன் வேலவன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், சசிகலா (V K Sasikala) கட்சிக்கு தலைமை தாங்கி, கட்சியை பலப்படுத்த வேண்டும் என்று ஒருமனதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒரு மாவட்ட மட்டத்தில் சசிகலாவுக்கு ஆதரவாக தீர்மானங்களை நிறைவேற்றப்பட்டன எனக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் கட்சியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ALSO READ | "கட்சியை பலப்படுத்த வாருங்கள்" சசிகலாவுக்கு ஆதரவாக அதிமுக கூட்டத்தில் தீர்மானம்
இது தொடர்பாக கோவில்பட்டி எம்.எல்.ஏ மற்றும் அதிமுக தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கடம்பூர் சி ராஜு AIADMK Kadambur C Raju) ஆகியோர் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய போது கூறியதாவது., இந்த கூட்டத்தில் போடப்பட்ட தீர்மானங்கள் செல்லாது அது அதிமுக கூட்டம் கிடையாது. அதில் பங்கேற்றவர்கள் அதிமுக நிர்வாகிகள் கிடையாது. அவர்கள் அனைவரும் அமமுக (AMMK) கட்சியை சேர்ந்தவர்கள். அந்த தீர்மானங்கள் அனைத்தும் அதிமுக மாவட்ட நிர்வாகிகள் மற்றும் அடிமட்ட மட்ட தொண்டர்களின் பிரதிபலிப்பு அல்ல என்றும், அவர்களின் கருத்துக்களைப் பெறாமல் நிறைவேற்றப்பட்டதாகவும் அவர் கூறினார்.
அதிமுகவின் பெயரை யாராவது தவறாக பயன்படுத்தினால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார். மேலும் சசிகலா அமமுகவிற்கு தலைமையேற்று வழி நடத்தலாம். அதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. அதிமுகவில் சசிகலாவை சேர்க்கக் கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டினார்.
சசிகலா மாநிலம் முழுவதும் பயணம் செய்து தொண்டர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதைப் பற்றி கவலைப்படவில்லை என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு கூறினார். ஆனால் அவர்கள் அதிமுக (AIADMK) பேனர்களை பயன்படுத்தக்கூடாது என எச்சரித்த அவர், எம் கே ரூபன் வேலவன் கட்சியிலிருந்து நீக்கப்படுவார் என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில், கொரோனா பரவல் தடுப்பு விதிகளை மீறி திரண்டு ஆலோசனைக்கூட்டம் நடத்தியதாக, ரூபம் கே. வேலவன் உள்ளிட்ட 80 பேர் மீது விளாத்திகுளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR