Sasikala vs AIADMK: சசிகலாவின் கட்சி எது? AMMKவா? அதிமுகவா? - சி.பொன்னையன்

சசிகலா நடராஜன் எந்த கட்சியை சார்ந்தவர் என்ற சர்ச்சை அண்மையில் எழுந்துள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு அதிமுகவின் சி பொன்னையன் விளக்கம் அளித்துள்ளார். 

Written by - ZEE Bureau | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jun 13, 2021, 02:52 PM IST
  • சசிகலா எந்தக் கட்சியை சேர்ந்தவர்?
  • அதிமுகவா? அமமுகவா?
  • சி.பொன்னையன் விளக்கம்
Sasikala vs AIADMK: சசிகலாவின் கட்சி எது? AMMKவா? அதிமுகவா? - சி.பொன்னையன்

சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் ஜே.ஜெயலலிதாவின் உதவியாளர் சசிகலா, டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் (Amma Makkal Munnetra Kazhagam (AMMK)) கட்சியைச் சேர்தவர் என்று அதிமுகவின் மூத்தத் தலைவர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட சசிகலாவிற்கும், கட்சி உறுப்பினர்களில் ஒருவருக்கும் இடையிலான தொலைபேசி உரையாடலின் ஆடியோ ஒன்று சில நாட்களுக்கு முன்பு கசிந்தது. அதன் அடிப்படையில் சசிகலா மீண்டும் அரசியலுக்கு திரும்புவது பற்றிய சர்ச்சைகள் எழுந்தன.

இது குறித்து விளக்கமளிக்கும் சி.பொன்னையன், "சசிகலா. எங்கள் கட்சியின் உறுப்பினர் அல்ல. அவர் டிடிவி தினகரனின் கட்சியைச் சேர்ந்தவர். அவர் அதிமுகவை (AIADMK) புதுப்பிக்கப் போவதாகக் கூறுவதற்கு எந்தவித முகாந்திரமும் இல்லை. சசிகலாவுடன் பேசுபவர்கள் மற்றும் தொடர்பு வைத்திருப்பவர்கள் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் அல்ல" என்று பொன்னையன் கூறினார். 

Also Read | தமிழகத்தில் TASMAC திறப்பதை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்

COVID-19 தொற்றுநோய் முடிந்தபின், தான் தீவிர அரசியலுக்கு திரும்புவதாக சசிகலா மே 30 அன்று சூசகமாக தெரிவித்திருந்தார். சசிகலாவிற்கும், அதிமுக கட்சி உறுப்பினர்களில் ஒருவருக்கும் இடையிலான தொலைபேசி உரையாடலின் ஆடியோ கிளிப்பில், அரசியலுக்கு திரும்புவதற்கான தனது திட்டங்கள் முடிவாகிவிட்டதாக சசிகலா தெரிவித்திருந்தார். 

தமிழக தேர்தலில் அதிமுக ஆட்சி அதிகாரத்தை இழந்த பின்னர் இந்த உரையாடல் ஆடியோ கசிந்துள்ளது. AMMK பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரனின் தனிப்பட்ட உதவியாளர் ஜனார்த்தனன் இந்த தொலைபேசி உரையாடலை உறுதிபடுத்துகிறார்.

அந்த ஆடியோ உரையாடலில், "கவலைப்பட வேண்டாம், நான் நிச்சயமாக கட்சியின் பிரச்சனைகளை தீர்த்து வைப்பேன். அனைவரும் தைரியமாக இருங்கள். கொரோனா தொற்று முடிந்ததும், நான் வருவேன்" என்று சசிகலா, அதிமுக உறுப்பினரிடம் சொல்கிறார். " நாங்கள் உங்கள் பின்னால் இருப்போம் அம்மா" என்று தொலைபேசியில் பேசிய அதிமுக உறுப்பினர் பதிலளிக்கிறார்.

Also Read | TN Lockdown: நாளை முதல் டீக்கடை, ஸ்வீட் கடைகள் இயங்க தமிழக அரசு அனுமதி

தான் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த மார்ச் மாதத்தில் சசிகலா அறிவித்தார். இது தொடர்பாக சசிகலா வெளியிட்ட அறிக்கையில் "நான் அரசியலில் இருந்து ஒதுக்கிக் கொள்கிறேன். தெய்வமான எனது  அக்காவின் (ஜெயலலிதா) பொற்கால ஆட்சிக்காக பிரார்த்தனை செய்கிறேன். அவருடைய கனவு நிறைவேற வேண்டும் என்று நான் தொடர்ந்து கடவுளிடம் வேண்டிக் கொள்வேன்" என்று தெரிவித்திருந்தார்.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் நான்காண்டு கால சிறை தண்டனையை அனுபவித்த பிறகு கடந்த பிப்ரவரி மாதம் சென்னைக்கு திரும்பிய சசிகலா, டி நகர் பகுதியில் வசிக்கிறார். 

2016 டிசம்பரில் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அ.இ.அ.தி.மு.க கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார. 2017 பிப்ரவரியில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தண்டனை பெற்ற பின்னர் அவர் அதிமுகவின் கட்டுப்பாட்டை தனது மருமகன் டிடிவி தினகரனிடம் ஒப்படைத்திருந்தார். 

சசிகலா மற்றும் தினகரனின் ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். பிறகு, எடப்பாடி பழனிசாமியுடன் சமரசமாகிவிட்டார் ஓ.பன்னீர் செல்வம். சசிகலா மற்றும் தினகரன் இருவரும் செப்டம்பர் 2017 இல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

Also Read | கீழடி & திருமலை நாயக்கர் அரண்மனை: அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

More Stories

Trending News