தமிழக தேர்தல் ( TN Elections) பிரச்சாரத்தின் போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அதிமுக (ADMK) புகார் அளித்ததை தொடர்ந்து,  நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மீது சென்னை காவல் துறை 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதல்வர் எடப்பாடி பழனிசாமி (Edappadi K.Palanisamy) குறித்து, மிகவும் கீழ் தரமான வகையில் ஆ.ராசா பேசிய பேச்சு கடும் சர்ச்சையைக் கிளப்பியது. முதல்வரின் பிறப்பு குறித்து மிகவும் மோசமாக பேசியதற்கு, அரசியல் தலைவர்கள் பலர் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். முகம் சுளிக்க வகையில் அவர் பேசிய பேச்சிற்கு, சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


தேர்தல் நேரத்தில் முதல்வரைத் தனிப்பட்ட முறையில் திமுக (DMK) தலைவர்கள் தாக்கி பேசியது, அவர் மீது பொது மக்களுக்கு அனுதாபத்தை ஏற்படுத்தி விட்டது எனலாம். அதிலும் கொங்கு மண்டலத்தை சேர்ந்த கொங்கு வேளாளர் சமுதாய மக்களின் கூட்டமைப்புகள், இதற்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுத்து, கடும் கண்டனத்தை பதிவு செய்ததோடு, எங்கள் சமுதாயத்தின் ஆதரவு திமுகவிற்கு இல்லை என பதிவு செய்துள்ளது.


திமுக சார்பாக பிரச்சாரம் செய்த, உதயநிதி ஸ்டாலின்,  லியோனி ஆகியோரின் பேச்சும் பெண்கள் முகம் சுளிக்கும் வகையில் இருந்தது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக ஊடக தளத்தில் பெரும் வைரலாகியது.  கண்டன குரல்கள் அதிகம் எழுந்ததை அடுத்து,  திமுக கண்ணியக் குறைவாகப் பேசுவதை அனுமதிக்காது, அடுத்தவர் விமர்சிக்கும் வகையில் திமுகவினர்  வாய்ப்பு அளிக்க கூடாது என ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.


இந்நிலையில், ஆ.ராசாவின் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து நடவடிக்கை எடுக்க அதிமுக (ADMK) சார்பில் அளிக்கப்பட்ட


புகாரின் அடிப்படையில், எம்.பி ஆ.ராசா மீது 294 (B) அவதூறாகப் பேசுதல், 153 ( இரு சமூக மக்களுக்கு இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசுதல்), தேர்தல் நடத்தை விதி முறையை மீறுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் சென்னை காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


ALSO READ | அதிமுக ஆட்சி அடிமை ஆட்சி என்ற வாதத்தை தகர்த்தெறிந்த எடப்பாடி


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR