இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மீது 2 பிரிவுகளில் கோவை மாநகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் விஜய் சேதுபதியை அடிப்பவர்களுக்கு  பரிசு ரூ.1001 வழங்கப்படும் என அறிவித்திருந்த நிலையில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதி சென்றுக்கொண்டு இருக்கும் போது மீது, அவரை எட்டி உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுக்குறித்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. இதனையடுத்து இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், அந்த சம்பவம் குறித்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.


இந்து மக்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில், தேவர் ஐயாவை அவமதித்த விஜய் சேதுபதியை யாரேனும் தாக்கினால் அவருக்கு ரூ.1,001 வெகுமதி வழங்கப்படும் எனப் பதிவிட்டு இருந்தார்.



 


தேசிய விருது பெற்ற நடிகருக்கு இவ்வாறு நடந்தது அனைவரையும் அதிர வைத்தது. விமானத்தில் மகா காந்தி என்பவர் விஜய் சேதுபதியுடன் செல்ஃபீ  எடுக்க வேண்டுமென்று அவரின் உதவியாளர் ஜான்சனிடம் கோரிக்கை விடுத்தார். ஆனால் அவர் மது அருந்தியிருந்ததால் விஜய் சேதுபதியின் உதவியாளர் மறுத்துவிட்டார். இதனால் அந்த நபர் ஆத்திரமடைந்து விமானத்திலேயே கைகலப்பு ஏற்பட்டது. 


அதனையடுத்து விமான நிலையத்திற்கு விஜய் சேதுபதி வந்ததும்,நடிகர் மகா காந்தி போதையில் செல்ஃபீ  எடுக்க முயன்றதாகவும், உதவியாளர் அதனை மறுத்ததால் தாக்கியதாகவும் கூறப்பட்டது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.  


இந்த சம்பவத்தை அடுத்து, இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் விடுத்த அறிக்கை சர்ச்சையை கிளப்பியது. அதாவது விஜய் சேதுபதியிடம் மகா காந்தி குரு பூஜைக்கு வந்தீர்களா? என்று வினவியதற்கு, "யார் குரு..?" என்று நக்கலாக கேட்டார். அதனால் தான் கைகலப்பு ஏற்பட்டது என்று மகா காந்தி ஒரு பேட்டியில் தெரிவித்தார்.


இதனை வைத்து அர்ஜூன் "பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஐயாவை விஜய் சேதுபதி அவமானப்படுத்தும் விதமாக பேசிவிட்டார். அதனால் விஜய் சேதுபதியை யார் உதைத்தாலும் அவர்களுக்கு ரூ.1001 பரிசுத்தொகை வழங்கப்படும்" என்று டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுனார் என்பது குறிப்பிடத்தக்கது.



உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR