கடந்த 2003 ஆம் ஆண்டு நடந்த இரண்டாம் நிலை காவலர் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட அருணாச்சலம் என்பவர் 2005ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். 2003ஆம் ஆண்டு முதல் பணியில் சேர்ந்ததாக கருதி பணி மூப்பு வழங்கக் கோரி தமிழக டிஜிபி-க்கு அருணாச்சலம் மனு அளித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த மனுவை பரிசீலிக்கவில்லை என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அருணாச்சலத்தின் கோரிக்கையை பரிசீலிக்க உத்தரவிட்டது.


இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்று  கூறி அருணாச்சலம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, நீதிபதி எம். தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தரப்பில் அரசு வழக்கறிஞர் யோகேஷ் கண்ணதாசன் ஆஜராகி, உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கடந்த 2021 ஆம் ஆண்டு மனுதாரரின் கோரிக்கைய டிஜிபி பரிசீலித்ததாகவும், பணியில் சேர்ந்த 3 ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்காமல் 11 ஆண்டுகள் கழித்து விண்ணப்பித்த காரணத்தால், மனுதாரர் நிராகரிக்கப்பட்டு விட்டதாக தெரிவித்தார்.


மேலும் படிக்க | ஸ்டாலின் விரைவில் குணமடைய வேண்டும் - கர்நாடக முதல்வர் ட்வீட்


இந்த தகவலை மறைத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். இதையடுத்து தவறான மனுவை தாக்கல் செய்ததற்காக இரண்டாம் நிலை காவலரான மனுதாரர் அருணாச்சலத்திற்கு 2000 ரூபாய் அபராதம் விதித்து, டிஜிபி சைலேந்திர பாபுவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அந்த அபராதத் தொகையை தமிழ்நாடு காவல்துறை மோப்ப நாய் பிரிவிற்கு வழங்கவும் மனுதாரருக்கு  உத்தரவிட்டுள்ளார்.


மேலும் படிக்க | இந்தியாவிற்குள் நுழைந்த குரங்கு அம்மை; ‘இந்த’ அறிகுறிகள் இருந்தால் எச்சரிக்கை தேவை


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ