Proselytism: மாணவி லாவண்யா விவகாரத்தில் மதமாற்ற குற்றச்சாட்டை மறுக்கும் பள்ளி நிர்வாகம்
பள்ளி மாணவி லாவண்யாவின் தற்கொலை, கட்டாய மதமாற்றம் அல்ல என்று கத்தோலிக்க நிறுவன அமைப்பு விளக்கம் கூறுகிறது...
'நான் ராமரைத்தான் கும்பிடுவேன். அதற்காக மற்றவர்களையும் ராமரைக் கும்பிடச் சொல்லி ஒருநாளும் என் மதக் கோட்பாடுகளைத் திணிக்க மாட்டேன்' இது மகாத்மா காந்தியின் பொன்மொழி.
இதை பொன்மொழி என்று சொல்லி ஒதுக்கி வைத்துவிட முடியாது என்பதை உணர்த்துகிறது அண்மையில் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த மாணவி லாவண்யாவின் மரணம்.
ஆனால், பள்ளி மாணவி லாவண்யாவின் தற்கொலை, கட்டாய மதமாற்றம் அல்ல என்று கத்தோலிக்க கல்வி நிறுவன அமைப்பு மறுக்கிறது.
"எங்கள் நிறுவனங்கள் இந்திய அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கொள்கைகளின் அடிப்படையில் இயங்குகின்றன" என்று அந்த அமைப்பு கூறியது.
தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் அரியலூரைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி ஜனவரி 19ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டதற்கு, அவர் படித்த பள்ளியின் மீது, கட்டாய மதமாற்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன.
ALSO READ | பள்ளி சிறுமி தற்கொலை; கட்டாய மத மாற்றம் காரணமா? போலீஸ் விசாரணை!
கத்தோலிக்க கல்வி நிறுவனத்தின் நிர்வாகி Brunolf Mary Fatima Paula, பள்ளி மீதான கட்டாய மத மாற்றம் (Forced conversions) குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்
தஞ்சாவூரில் 160 ஆண்டுகள் பழமையானது எங்களுடைய பள்ளி என்று கூறும் அவர், எங்களது கல்வி நிறுவனங்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி இயங்கி வருகின்றன என்றும் கூறுகிறார்.
கத்தோலிக்க கல்வி நிறுவன உயர்மட்ட ஜெனரல் புருனால்ப் மேரி பாத்திமா பவுலா வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மாணவி தற்கொலை தொடர்பான விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்று மாணவி லாவண்யாவின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ALSO READ | மகன் கண் முன்னே விபத்தில் சிக்கி பலியான தாய்: திருப்பத்தூரில் பரிதாபம்
மாணவி லாவண்யா உயிரிழந்த ஜனவரி 19-ம் தேதி முதல், மதமாற்ற குற்றச்சாட்டுக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சியின் மாநில பிரிவு போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
நாட்டில் கட்டாய மதமாற்றங்களே நடைபெறுவதால், மதமாற்ற தடைச் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்ற குரல்களை ஒலிக்கச் செய்துள்ளது மாணவி லாவண்யாவின் மரணம். ஆனால், மரணத்திற்கு காரணம் மதம் அல்ல என்ற குரல்களும் தற்போது ஒலிக்கத் தொடங்கிவிட்டன.
இந்த சூழ்நிலையில், அரியலூர் மாணவி தற்கொலை மரணம் தொடர்பாக விசாரணை நடத்த 4 பேர் கொண்ட குழுவை அமைத்து பாஜக தலைவர் ஜெ பி நட்டா உத்தரவு பிறப்பித்துள்ளார். விசாரணையை விரைவில் முடித்து அறிக்கை தாக்கல் செய்யவும் அறிவுறுத்தியிருக்கிறார்.
இந்தியாவின் சட்டங்கள் மதமாற்றத்தைப் பற்றி என்ன சொல்கின்றன? குறிப்பாக தமிழகத்தைப் பற்றி பேசினால், 2002-ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில், அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா 'கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம்' கொண்டு வந்தார்.
ALSO READ | பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு? அறிவிப்பு விரைவில்...
அந்த சட்டம் கடும் எதிர்ப்புகளைச் சந்தித்தது. அப்போது. பாரதிய ஜனதா கட்சியைத் தவிர, அனைத்துக் கட்சிகளும் இந்தச் சட்டத்தை எதிர்த்தன. ஆனால் தனது உறுதியில் இருந்து பின்வாங்க ஜெயலலிதா முன்வரவில்லை.
இருந்தாலும், தேர்தல் தோல்வியால் அவர் தனது மனதை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியத்திற்கு தள்ளப்பட்டார். 'மதமாற்றத் தடைச் சட்டத்தை' ரத்துசெய்யும் அவசரச் சட்டத்தை அந்நாள் முதல்வர் பிறப்பித்தார் என்பது தமிழ்நாட்டின் மதமாற்ற தடைச் சட்டத்தின் வரலாறு.
அண்மையில் கர்நாடக மாநிலத்தில் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் நிறைவேறியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ALSO READ | 4ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உறவினருக்கு தர்ம அடி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR