பள்ளி சிறுமி தற்கொலை; கட்டாய மத மாற்றம் காரணமா? போலீஸ் விசாரணை!

கிறிஸ்துவ மதத்திற்கு மாறுமாறு பள்ளிக்கூடம் தொடர்ந்து வறுபுறுத்தி சித்ரவதை செய்ததால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 20, 2022, 10:52 AM IST
  • அவமானம் தாங்க முடியாமல் மனமுடைந்த லாவண்யா.
  • பள்ளியின் மற்ற குழந்தைகள் பொங்கல் விடுமுறைக்கு வீட்டிற்கு சென்றிருந்தனர்.
  • லாவண்யாவுக்கு ஜனவரி 9 இரவு முதல் தொடர்ந்து வாந்தி ஏற்பட்டது.
பள்ளி சிறுமி தற்கொலை; கட்டாய மத மாற்றம் காரணமா? போலீஸ் விசாரணை! title=

தஞ்சாவூர் அருகே திருக்காட்டுப்பள்ளி  தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த எம்.லாவண்யா என்ற 17 வயது சிறுமி, தொடர்ந்து பள்ளியில் படிக்க வேண்டும் என்றால், கிறிஸ்துவ மதத்திற்கு மாறுமாறு பள்ளிக்கூடம் தொடர்ந்து வறுபுறுத்தி சித்ரவதை செய்ததால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் வடுகபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் லாவண்யா. இவர் தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் உள்ள அரசு உதவி பெறும் கிறிஸ்தவ பள்ளியான தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். அவரது தாயார் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், தனது பள்ளிக்கு அருகிலுள்ள புனித மைக்கேல் பெண்கள் விடுதியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக தங்கி வருகிறார்.

தொடர்ந்து பள்ளியில் படிக்க வேண்டுமென்றால் மதம் மாற வேண்டும் என்று கூறி லாவண்யாவை கிறிஸ்தவ மதத்திற்கு மாறுமாறு பள்ளி நிர்வாகம் வற்புறுத்திய நிலையில், சிறுமி அதற்கு மறுத்துள்ளார்.

ALSO READ | ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்; காவல்துறை தீவிர விசாரணை!

பள்ளியின் மற்ற குழந்தைகள் பொங்கல் விடுமுறைக்கு (Pongal Festival) வீட்டிற்கு சென்ற நிலையில், பள்ளி ஊழியர்கள் லாவண்யாவை கழிப்பறை சுத்தம் செய்தல், பாத்திரம் கழுவுதல் போன்ற வேலைகளை செய்ய வற்புறுத்தியுள்ளனர். அவமானம் தாங்க முடியாமல் மனமுடைந்த லாவண்யா தோட்டத்தில் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

லாவண்யாவுக்கு ஜனவரி 9 இரவு முதல் தொடர்ந்து வாந்தி ஏற்பட்ட நிலையில், அவரது உடல்நிலை மோசமடைந்ததால், விடுதி வார்டன் அவரை சிகிச்சைக்காக அருகில் உள்ள கிளினிக்கிற்கு அழைத்துச் சென்றார். தொடர்ந்து வாந்தி எடுத்ததால், விடுதி வார்டன், அவரது பெற்றோரை அழைத்து, வீட்டிற்கு அழைத்துச் செல்லும்படி கூறினார். வீடு திரும்பிய லாவண்யா, பூச்சிக்கொல்லி மருந்தை குடித்ததைப்பற்றி தெரிவிக்கவில்லை.

ஜனவரி 15 அன்று அவர் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது நுரையீரல் கிட்டத்தட்ட 85% பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. அவளது சிறுநீரகமும் செயலிழந்தது. தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஜனவரி 18ஆம் தேதி தான் விஷம் குடித்ததை மருத்துவரிடம் தெரிவித்திருக்கிறார். ஆனால், சிறிது நேரத்திலேயே சிறுமி உயிரிழந்தார்.

சிறுமி வழங்கியுள்ள கடைசி வாக்குமூலம், அங்கு மதம் மாற நெருக்குதல் அளிக்கப்பட்ட விதம், அவர் பள்ளியில் அவர் அனுபவித்த சித்திரவதைகள், அதற்கு காரணமானவர்கள் யார் என்பதை விவரிக்கிறார்.

ALSO READ | கோவையில் கஞ்சா விற்பனை செய்த தென்னாப்பிரிக்க மாணவர் கைது

“என் பெயர் லாவண்யா. அவர்கள் (பள்ளி) என் முன்னிலையில் என் பெற்றோரிடம் என்னை கிறிஸ்தவ மதத்திற்கு மாறினால், மேல் படிப்புக்கு உதவுவோம் என்று கேட்டனர். நான் ஏற்காததால், என்னை திட்டிக்கொண்டே இருந்தார்கள்,'' என வீடியோவில் கூறியுள்ளார். தன்னை சித்திரவதை செய்ததாகக் கூறப்படும் ரேச்சல் மேரியின் பெயரையும் அவர் குறிப்பிடுகிறார்.

ஜனவரி 17-ம் தேதி லாவண்யாவின் உறவினர்கள் திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையம் முன்பு திரண்டு, விடுதி வார்டன் சகாயமேரி கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்ய முயற்சித்ததால், லாவண்யா பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டதாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இது குறித்த புகாரின் பேரில் வார்டன் சகாயமேரியை (62) கைது செய்தனர். சிகிச்சை பலனின்றி மாணவி லாவண்யா இறந்த சம்பவம் திருக்காட்டுப்பள்ளி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ALSO READ | 4ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உறவினருக்கு தர்ம அடி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News