காவிரி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினும் தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை சந்தித்து அவசர ஆலோசனை நடத்த உள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதாக கடந்த மாதம் 22-ஆம் நாள், காவிரி விவகாரம் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்து கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டு ஒரு மித்த குரல் கொடுத்தனர்.


மேலும் இக்கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக பிரதமரிடம் நேரில் வலியுறுத்தவும் முடிவு செய்யப்பட்டது.


இந்நிலையில் இன்று காவிரி விகராம் தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமைய அவர்கள் வரும் மார்ச் 7 ஆம் நாள் அனைத்து கட்சி கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளார். அதே வேலையில் தமிழக முதல்வர் பழனிசாமி அவர்களும், இவ்விவகாரம் தொடர்பாக தமிழக எதிர்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் அவர்களுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டார்.


இதனையடுத்து, காவிரி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினும் தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை சந்தித்து அவசர ஆலோசனை நடத்த உள்ளனர்.