NEET மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க உத்தரவு!
தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்ணாக 196 மதிப்பெண்கள் வழங்க சிபிஎஸ்இ-க்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவு!
தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்ணாக 196 மதிப்பெண்கள் வழங்க சிபிஎஸ்இ-க்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவு!
நீட் தேர்வில் தமிழ் வினாத்தாள் மொழி பெயர்ப்பில் அதிகக்குளறுபடி இருந்ததால், தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 49 வினாக்களுக்கு நான்கு மதிப்பெண்கள் வீதம் 196 மதிப்பெண்கள் வழங்கவேண்டும் எனக் கோரி உயிர்நீதிமன்ற மதுரை கிளையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த டி.கே.ரங்கராஜன் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் செல்வம், பசீர் அகமது ஆகியோர் கொண்ட அமர்வில் நடை பெற்று வருகிறது. இந்த வழக்கு கடந்த 6-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, பீகார் மாநிலத்தில், தேர்வு எழுதியவர்களை விட தேர்ச்சி பெற்றவர்கள் அதிகரித்துள்ளது எப்படி என்றும் கருணை மதிப்பெண் கேட்டு வழக்குத் தொடர்ந்த உடன் அவசர அவசரமாக தர வரிசைப் பட்டியல் வெளியிட்டது ஏன் எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதனால் தமிழக மாணவர்கள் வாழ்நாள் கனவு தகர்ந்து போகதா என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து, இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்ணாக 196 மதிப்பெண்கள் வழங்க சிபிஎஸ்இ-க்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
மேலும், 49 வினாக்களுக்கு தலா 4 மதிப்பெண்கள் வீதம் சுமார் 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் எனவும் கருணை மதிப்பெண் வழங்கி 2 வாரத்தில் புதிய தரவரிசைப் பட்டியல் வெளியிடவேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.