அடுத்த வருடம் முதல் நாடு முழுவதும் ஒரே மாதிரியான நீட் தேர்வு
அடுத்த ஆண்டு முதல் நாடு முழுவதும் ஒரே மாதிரியான தேர்வு நடைபெறும் என சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடக்கும் சிபிஎஸ்இ 10-ம், 12-ம் வகுப்பு தேர்வுகளில் மதிப்பெண் முறை பின்பற்றப்படும் என்று சிபிஎஸ்இ நேற்று அறிவித்திருந்த நிலையில், நாடு முழுவதும் அடுத்த ஆண்டு முதல் ஒரே மாதிரியான தேர்வுகள் நடைபெறும் என சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நீட் எனப்படும் மருத்துவப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வை நாடு முழுவதும் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதற்கு தமிழக மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இந்த ஆண்டு நடந்த நீட் தேர்வு வினாத்தாள்கள் மாநிலங்கள் வாரியாக வழங்கப்பட்டதாகவும், பிற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் வினாத்தாள் மிக கடினமாக இருந்ததாகவும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், அடுத்த ஆண்டு முதல் நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு ஒரே மாதிரியான வினாத்தாள் வழங்கப்படும் என கூறப்பட்டது.