மீனாட்சியம்மன் கோவிலுக்குள் பொதுமக்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 2ம் தேதி இரவு 11:30 மணி அளவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கிருந்த 30-ம் மேற்பட்ட கடைகள் தீயினால் பாதிக்கப்பட்டது.


இதை தொடர்ந்து, நேற்றிரவு மீண்டும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டது. மேலும், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்திற்குள் இருக்கும் 115 கடைகளை இன்று 12 மணிக்குள் அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்திருந்தது.


இந்நிலையில், மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் மீனாட்சி கோயிலில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். தீவிபத்திற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உயர் மட்ட குழு அமைக்க வேண்டும் எனக்கூறினார்.


இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைகிளை, மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் பொதுமக்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் தவிர வேறு யாரும் கோவிலுக்குள் செல்போன் எடுத்த செல்லக் கூடாது என உத்தரவிட்டுள்ளது.