’உண்மையான ஊழல் கட்சி பாஜக தான்’ ஆதாரத்தை சுட்டிக்காட்டிய தயாநிதி மாறன்
Dayanidhi Maran criticized BJP, Real Corrupt Party: இந்தியாவில் உணமையான ஊழல் கட்சி பாஜக தான் என மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
தயாநிதி மாறன் தீவிர பிரச்சாரம்
மத்திய சென்னை தொகுதியில் திமுக வேட்பாளராக தயாநிதி மாறன் மீண்டும் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் செல்வாக்கு இருந்தாலும் தயாநிதி மாறன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர் மத்திய சென்னையின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று வாக்காளர்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார். அரும்பாக்கம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த அவர், பாஜகவை கடுமையாக விமர்சித்தார். வாக்காளர்கள் மத்தியில் அவர் பேசும்போது, பாஜக தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் எல்லாம் தேர்தல் வரும் போது மட்டுமே தமிழகம் வருவதாக கூறினார்.
மேலும் படிக்க - ’மகனுக்கு சீட் இல்லை’ சபாநாயகர் அப்பாவு திமுக தலைமை மீது அதிருப்தியா?
பாஜக ஊழல் கட்சி
பாஜக, அதிமுக இடையே கள்ள உறவு இருப்பதாக கூறிய தயாநிதி மாறன், அதிமுக நேரடியாக போட்டியிடாத இடங்களில் அதிமுக நிர்வாகிகள் பாஜகவுக்கு தேர்தல் வேலை செய்வதாக குற்றம்சாட்டினார். திமுக தேர்தல் அறிக்கையில் கூறியதை நிறைவேற்றும் என்றும் பாஜக சொல்வதும் இல்லை, செய்வதும் இல்லை என கூறினார். சிஏஜி அறிக்கைப்படி ஊழல் முறைக்கேடு நடந்துள்ளது தெரிந்த பிறகும், அமலாக்கதுறை, சிபிஐ ஏன் விசாரிக்கவில்லை என கேள்வி எழுப்பிய தயாநிதி மாறன், உண்மையில் ஊழல் கட்சியே பாஜக தான் என்றும் விமர்சித்தார்.
பாஜக, தேமுதிக போட்டி
இந்த தொகுதியில் தயாநிதி மாறனுக்கு போட்டியாக பாஜகவில் வினோஜ் பி செல்வம், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் தேமுதிக சார்பில் பார்த்தசாரதி ஆகியோர் போட்டியிடுகின்றனர். அதிமுகவுக்கு செல்வாக்கு இருக்கும் தொகுதி என்றாலும், 2019 மற்றும் இந்த தேர்தல்களில் கூட்டணி கட்சிகளுக்காக மத்திய சென்னை மக்களவை தொகுதியை ஒதுக்கியுள்ளது. இந்த தொகுதியில் வடமாநிலத்தவர்களின் வாக்கு குறிப்பிட்ட விழுக்காடு இருப்பதால் அதனை குறிவைத்து வினோஜ் பி செல்வம் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். அவர் தயாநிதி மாறனுக்கு கடும் போட்டியை கொடுப்பார் என யூகிக்கப்பட்டுள்ளது.
மத்திய சென்னை தொகுதி பின்னணி
தயாநிதி மாறன் இந்த தொகுதியில் ஏற்கனவே 2004, 2009 மக்களவை தேர்தல்களில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2014 ஆம் ஆண்டு மட்டும் அதிமுக வேட்பாளர் விஜயக்குமாரிடம் தோல்வியை தழுவினார். இவருக்கு முன்பாக இந்த தொகுதியின் எம்பியாக இவரது தந்தை முரசொலி மாறன் மூன்று முறை போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். இந்த தொகுதியில் செல்வாக்கு மிக்க நபராகவும் ஏற்கனவே இரண்டு தேர்தல்களில் வெற்றி பெற்றவராகவும் இருப்பதால் மத்தி சென்னை தொகுதியில் மீண்டும் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.
மேலும் படிக்க - கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டுவதில் தான் கமிஷன் அடிக்க முடியும் - பாஜக அண்ணாமலை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ