அஞ்சலக கணக்கர் தேர்வுகளை தமிழிலும் எழுதலாம் என மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அஞ்சல் துறைக்கான தேர்வுப் பட்டியலில் தமிழ் மொழி (Tamil Language) இல்லாமல் இருப்பது குறித்து கடந்த வாரம் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது தமிழ் மொழியிலும் தேர்வு எழுதலாம் (Postal Exam) என மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 


அஞ்சல் துறையில் (Post Office) பல்வேறு பணிகளை நிரப்ப கடந்த ஆண்டு ஜூலை மாதம் 14 ஆம் தேதி தேர்வு நடந்தது. அந்த தேர்வில் வினாத்தாள் ஆங்கிலம் (English) மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே இருந்தது. இரண்டாம் வினாத்தாள் மட்டுமே மாநில மொழிகளில் இருந்தது. இதை தொடர்ந்து அஞ்சல் துறை தேர்வில் (Postal Exam) தமிழ் உள்பட மாநில மொழிகள் புறக்கணிக்கப்பட்டதற்கு நாடாளுமன்றத்தில் தமிழக MP-க்கள் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். இதையடுத்து, ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் நடந்து முடிந்த தபால் துறைத் தேர்வை ரத்து செய்வதாக மத்திய அரசு (Central Government) அறிவித்தது. விரைவில் நாடு முழுவதும் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் தபால் துறைத் தேர்வு நடைபெறும் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.



ALSO READ | தபால் நிலையத்தில் நீங்கள் முதலீடுசெய்யும் 100 ரூபாய் பெரிய நன்மையை தரும்..!


இந்தி பேசாத மாநிலங்களில் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்பட அட்டவணையில் உள்ள அனைத்து மாநில மொழிகளிலும் வழக்கம் போல் தேர்வு நடைபெறும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில், அஞ்சல் துறைத் (INDIA POST) தேர்வுகளுக்கான பட்டியல் ஜனவரி முதல் வாரம் வெளியிடப்பட்டது. மீண்டும், அதில் தமிழ் மொழி இல்லை என்கிற தகவல் வெளியானது. இது மத்திய அரசின் முந்தைய அரசாணைக்கு மாறாக உள்ளதாகப் பலரும் கேள்வி எழுப்பினர்.


இந்நிலையில், பிப்ரவரி 14 ஆம் தேதி நடைபெற உள்ள அஞ்சலக சேவை கணக்கர் தேர்வுகளை ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட மொழிகளுடன் தமிழிலும் எழுதலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த தகவலை இந்தியா போஸ்ட் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. தமிழ்நாடு வட்டத்தில் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த தேர்வை ஆங்கிலம் அல்லது இந்தி அல்லது தமிழில் எழுதலாம் என கூறப்பட்டுள்ளது.


உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்... 


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR