தமிழகத்தின் காவிரி படுகையில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்காக மத்திய அரசு வெளியிட்டுள்ள ஏல அழைப்பை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது தொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (ஜூன் 16) வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவித்த பிறகு ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு ஒப்பந்த புள்ளிகளை கோரியிருப்பது விவசாயிகளிடையே மிகுந்த அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.


எனவே, விவசாயிகளுடைய நியாயமான அச்சத்தை போக்கும் வகையில் மத்திய அரசு ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் வலியுறுத்துகிறது" என தெரிவித்துள்ளார்.



ஓரிரு தினங்களுக்கு முன்னதாக, தமிழக முதலமைச்சர் எம் கே ஸ்டாலின் இதே கோரிக்கையை பிரதமர் நரேந்திர மோடியிடம் முன்வைத்தார். மேலும் மாநிலத்தில் இதுபோன்ற முயற்சிகளை கடுமையாக எதிர்த்தார்.


காவிரி படுகை, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் (PAZ) மற்றும் தமிழகத்தின் உணவு பாதுகாப்பு மற்றும் வேளாண் சார்ந்த பொருளாதாரத்தின் அடிப்படையாகும். இந்த மண்டலம் கோடிக்கணக்கான விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக இருக்கிறது. 


ஜூன் 10ஆம் தேதியன்று, சர்வதேச அளவிலான ஏலத்திற்காக மத்திய அரசு Discovered Small Field (DSF) bid round-III என்ற ஏல நடைமுறையை அறிமுகப்படுத்தியது இந்த மெய்நிகர் நிகழ்வில் 450 க்கும் மேற்பட்டவர்கள் கலந்துக் கொண்டனர். 2021 ஆகஸ்ட் 31 வரை, ஏலம் கோருபவர்கள் தங்கல் ஏல கோரிக்கைகளை சமர்ப்பிக்க முடியும்.


Also Read | Ration Card Apply: புதிய ரேஷன் கார்டுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி


தமிழகத்தின் டெல்டா பகுதியான திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் அரியவகை நிலக்கரி இருப்பதாக மத்திய இயற்கை எரிவாயு மற்றும் பெட்ரோலியத்துறை கண்டறிந்தது. அந்த நிலக்கரி படிமத்தின் மேல்படர்ந்துள்ள  மீத்தேன் வாயு மிகவும் அரிதான ஒன்று. எனவே வியாபாரரீதியாக எடுக்கும் பொருட்டு ஹரியானா மாநிலத்தை சேர்ந்த கிரேட் ஈஸ்ட்டர் எனர்ஜி என்ற நிறுவனத்துடன் 2010 ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது. இந்த நிறுவனம் மீத்தேன் வாயு திட்டத்தில் 5000 கோடி வரை முதலீடு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. 


மத்திய அரசு இந்தத் திட்டத்தை வெளியிட்டதில் இருந்தே  விவசாயிகள் மற்றும் பொதுமக்கள்  கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் சுற்று சூழல் பாதிக்கும் என்றும், கிணறுகள் அமைக்கும் பொழுது வெளியேற்றப்படும் நீரினால் நிலத்தடி நீர் குறைந்து கடல்நீர் உட்புகும், இது விவசாயத்தை பாதிக்கும் என்று மக்கள் பல்வேறு விதமான போராட்டங்களை முன்னெடுத்தனர்.


விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதை முன்வைத்து தமிழகக்த்தில் பெரிய அளவில் போராட்டகாரர்கள் நடைபெற்றன. விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் தொடர் போராட்டத்தினால் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா தற்காலிகமாக மீத்தேன் வாயுக் கிணறுகள் தொடர்பான செயல்பாடுகளுக்குத் தடை விதித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Also Read | Education: தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை குறித்து ஆராய ஆணையம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR