தமிழகத்தின் 5 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு!!
வெப்பச்சலனம் காரணமாக இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..!
வெப்பச்சலனம் காரணமாக இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..!
வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், அடுத்த 24 மணி நேரத்தில் திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும், அடுத்த 48 மணி நேரத்தில் சென்னை உள்ளிட்ட 21 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் கூறியுள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது... "வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
ALSO READ | இனி SBI அனைத்து வங்கி வசதிகளையும் வீட்டு வாசலில் வழங்கும்..!
மத்திய வங்க கடல் பகுதியில் வருகிற 19 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும், அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறக் கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை, புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதிகபட்சமாக திருவண்ணாமலை சேத்துப்பட்டில் 10 செ.மீ., சென்னை பெரம்பூரில் 5 Cm மழை பதிவானது.