மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த வழக்கில் சிவசங்கர் பாபா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில்ஹாரி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அப்பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது  பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், போக்சோ சட்டம் உட்பட 8 பிரிவுகளின் கீழ் மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.  இதனையடுத்து இந்த வழக்கு தமிழ்நாடு காவல்துறையிடம் இருந்து சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. 


இதனை தொடர்ந்து சிவசங்கர் பாபா டெல்லியில் வைத்து கடந்த ஜூன் 16 ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிவசங்கர் பாபாவிற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் அவரது பெண் பக்தையான சுஷ்மிதா என்பவரும் கைது செய்யப்பட்டார்.


இதுவரை 18 முன்னாள் மாணவிகள் சிவசங்கர் பாபா மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சிவசங்கர் பாபாவிடம் விசாரணைகள் நடத்தப்பட்டது. மேலும் இதில் சுஷில்ஹாரி பள்ளி ஆசிரியர்களிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். 


இந்நிலையில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிவசங்கர் பாபா மீது 300 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி போலீசார் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.  இதில் 30 முன்னாள் மாணவிகளை சாட்சியங்களாக சேர்த்து விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்று அதற்கான ஆவணங்களையும் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்டடுள்ளது. 


ALSO READ | சிக்கலில் சிவசங்கர் பாபாவின் சுஷில் ஹரி பள்ளி: அங்கீகாரம் ரத்தாகுமா?


 


மேலும் சிவசங்கர் பாபா, அவரது பெண் பக்தைகள் பாரதி, தீபா மற்றும் சுஷ்மிதா ஆகிய நான்கு பேர் மீதும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விடுதியில் இருந்த மாணவிகளை மூளைச்சலவை செய்து சாமியார் சிவசங்கர் பாபாவின் பாலியல் இச்சைக்கு உடந்தையாக இருந்ததாக இவர்கள் மீது சந்தேகமின்றி குற்றம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது எனவும், அதற்கான ஆதாரங்கள் குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்பட்டிருக்கிறது எனவும் சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். 


இதனை தொடர்ந்து இந்த வழக்கில் 59 நாட்களில் விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள சிபிசிஐடி போலீசார் சிவசங்கர் பாபா மீதான பாலியல் வழக்கில் நேரடி ஆதாரங்கள் கிடைத்து இருப்பதாக கூறியுள்ளனர்.


ALSO READ | Shiva Shankar Baba: 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிவசங்கர் பாபா


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR