Chennai Central Tamil Nadu Lok Sabha Election Result 2024: தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 19ம் தேதி மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி இருந்தது. சென்னையில் உள்ள மத்திய சென்னை மக்களவை தொகுதி முக்கியமான தொகுதியாக பார்க்கப்படுகிறது. திமுகவின் கோட்டைகளில் மத்திய சென்னை தொகுதியும் ஒன்று. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய சென்னை மக்களவை தொகுதிக்குள் வில்லிவாக்கம், எழும்பூர் (தனி), துறைமுகம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, அண்ணா நகர் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் வரும். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் மேலே குறிப்பிட்டுள்ள 6 தொகுதிகளிலுமே திமுக வெற்றி பெற்று இருந்தது.


மேலும் படிக்க | NDA vs INDIA: பிரதமரை தீர்மானிக்கும் 'இந்த 6 மாநிலங்கள்' - நாளைக்கு இதுதான் ரொம்ப முக்கியம் 


மத்திய சென்னை சட்டமன்ற தொகுதிகள்


வில்லிவாக்கம்
எழும்பூர்
துறைமுகம்
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி
ஆயிரம் விளக்கு
அண்ணா நகர் 


மத்திய சென்னை வாக்காளர்கள் விவரம்


மொத்த வாக்காளர்கள் :13,50,161
ஆண் வாக்காளர்கள் : 6,67,465             
பெண் வாக்காளர்கள் :6,82,241             
மூன்றாம் பாலினத்தவர் : 455


மத்திய சென்னை வேட்பாளர்கள் யார் யார்?


மத்திய சென்னை தொகுதியில் 4 முறை போட்டியிட்டு 3 முறை வென்ற திமுகவின் தயாநிதி மாறன் வெற்றி பெற்றுள்ளார். மேலும் இந்த 2024 மக்களவை தேர்தலில் 5வது முறையாக போட்டியிட்டுள்ளார். பாஜக சார்பில் வினோஜ் செல்வம் போட்டியிட்டுள்ளார். இவர் கடந்த சட்டமன்ற தொகுதியிலும் போயிட்டு தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிமுக சார்பில் அதன் கூட்டணி கட்சியான தேமுதிகவில் இருந்து பார்த்தசாரதி போட்டியிட்டுள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பில் கடந்த முறை நின்ற டாக்டர் கார்த்திகேயன் போட்டியிடுகிறார். 
வெற்றி வாய்ப்பு யாருக்கு?


மத்திய சென்னை தேர்தல் நிலவரம்


இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் மத்திய சென்னை தொகுதியில் திமுக தான் அதிகமுறை வெற்றி பெற்றுள்ளது. திமுக 7 முறையும், காங்கிரஸ் கட்சி 2 முறையும், அதிமுக 1 முறையும் வெற்றி பெற்றுள்ளது. இந்த மத்திய சென்னை தொகுதியில் கலாநிதி, முரசொலி மாறன், இரா. அன்பரசு போன்றோர் வெற்றி பெற்றுள்ளனர். மேலும் இந்த தொகுதியில் தொண்டர்ந்து 3 முறை வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார் முரசொலி மாறன். அவரது மகனான தயாநிதி மாறன் தொடர்ந்து இரண்டு முறை (2004, 2009) இந்த தொகுதியில் வெற்றி பெற்றார். 2014 தேர்தலில் தோல்வியடைந்த இவர் மீண்டும் 2019-ல் வெற்றி பெற்றார். எனவே, இந்த முறையும் வெற்றி வாய்ப்பு இவருக்கு தான் அதிகம் உள்ளது.


மேலும் படிக்க | அருணாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அபார வெற்றி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEata