யாரும் வரல... போனும் எடுக்கல... டாஸ்மாக் மட்டும் இருக்கு - சென்னையில் மக்கள் போராட்டம்!
Chennai Rains: சூளைமேடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிவாரணப் பொருள்கள் கிடைக்காத கோபத்தில் மக்கள் சாலையில் போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.
Chennai Rains: மிக்ஜாம் புயல் (Michaung Cyclone) காரணமாக சென்னையில் கடந்த டிச. 2, 3, 4 ஆகிய தேதிகளில் வரலாறு காணாத கனமழை பெய்தது. 4ஆம் தேதி இரவே மழை நின்றுவிட்ட நிலையில், அடையாறு, கூவம் உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், வடசென்னையின் பல பகுதிகள், அரும்பாக்கம், சூளைமேடு, கோடம்பாக்கம், அசோக் நகர், மடிப்பாக்கம், வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளநீர் இன்னும் வடியாததால் மின்சார சேவையும் வழங்கப்படவில்லை.
மக்கள் அடிப்படை வசதிகள் ஏதுமின்றி கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மின்சார சேவை மட்டுமின்றி இணைய சேவையும் கிடைக்கவில்லை. மொபைல் சார்ஜ் கிடைக்காததால் தொலைத்தொடர்பும் சிரமமாக இருக்கிறது. இன்று புறநகர் பகுதிகளில் ஹெலிகாப்டர்கள் மூலம் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருவதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் விற்பனையில் பிரச்னையில், டீசல் விநியோகம் தற்போது தடைப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பால், தண்ணீர், பிரெட் போன்ற உணவு பொருள்களை பெற மக்கள் திக்குமுக்காடி வருகின்றனர். குழந்தைகள், முதியவர்கள் இருக்கும் வீடுகளில் நிலைமை இன்னும் மோசம். மழை நின்று இரண்டு நாள்களாகியும் மழைநீர் வடியாததாலும், மின்சாரம் வழங்காததும் மக்களிடம் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. வடசென்னை பகுதிகளில் மக்கள் போராட்டத்தில் இறங்கிய நிலையில், தற்போது சூளைமேடு பெரியார் பாதை உள்ளிட்ட சுற்றுவட்டார மக்களும் சாலையில் இறங்கி தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் படிக்க | 'உடனடியாக நிதி வழங்கவும்...' பிரதமர் மோடிக்கு, ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் என்னென்ன?
மூன்று நாள்கள் ஆகியும் அரசு சார்பில் முறையான நிவாரணப் பொருள்கள் வழங்கப்படவில்லை எனவும், அரசு அதிகாரிகள் இங்கு வரவில்லை எனவும் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். அன்றாட தேவைக்கான பொருள்கள் விலை அதிகமாக விற்கப்படுவதாகவும், குடிநீர் உள்ளிட்ட வசதிகளும் கிடைக்காமல் அவதிப்படுவதாக மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
சென்னை சூளைமேடு பெரியார் பாதையில் நமது ஊடகத்திடம் பேசிய ஒரு பெண்மணி,"சேப்பாக்கத்தில் ரூ.42 கோடிக்கு கார் ரேஸ் போட்டிகளுக்கு சாலைகளை போடுகின்றனர். கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் அருகில் உள்ள டாஸ்மாக் இயங்குகிறது, ஆனால் மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் கிடைக்கவில்லை. ஊடகங்கள் வீடியோ எடுக்க அஞ்சுகின்றனர். மெழுகுவர்த்தி 110 ரூபாய்க்கு விற்கின்றனர்" என அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை அடுக்குகின்றனர்.
மக்கள் குற்றச்சாட்டு