சென்னை: பெண்கள் பாதுகாப்பு மற்றும் நலன் குறித்த பல நடவடிக்கைகள் தமிழக அரசு மூலம் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழக அரசின் உச்சகட்ட முன்னுரிமைகளில் பெண்களின் பாதுகாப்புக்கு அதிகபட்ச முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலையில், சென்னையில் இன்று பெண்களுக்கான ஆலோசனை மற்றும் உதவி மையத்தை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் (Shankar Jival) தொடங்கி வைத்தார்.


‘நிர்பயா’ என்ற பெயரில் பெண்களுக்கான ஆலோசனை மற்றும் உதவி மையம் சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று துவக்கி வைக்கப்பட்டது. இதனை சென்னை கவால் ஆணையர் சங்கர் ஜிவால் தொடக்கிவைத்தார்.


இந்த நிகழ்வுக்குப் பிறகு சங்கர் ஜிவால் செய்தியாளர்களை சந்தித்தார். பெண்கள் பாதுகாப்பு மற்றும் அது தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பேசிய சங்கர் ஜிவால், “நிர்பயா திட்டத்தின் கீழ் பெண்களுக்கான ஆலோசனை மற்றும் உதவி மையம் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. நிர்பயா திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் நிதியில் இருந்து 55 லட்சம் ரூபாய் இந்த உதவி மையத்துக்கு 3 ஆண்டுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.” என்று கூறினார்.


பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மையத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆலோசனை வழங்க சிறப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்தார். சமூக நலத்துறை உதவியுடன் இந்த உதவி மையம் செயல்படும் என்று கூறிய அவர் பெண்கள் பிரச்சனைகள் அனைத்துக்கும் உடனடியாக சட்ட ஆலோசனை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.


ALSO READ:பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு விண்ணப்ப பதிவு தொடங்கியது


பெண்கள் (Women) உதவி பெறுவதற்கான ஒரு கட்டணமில்லா ஹெல்ப்லைனும் அளிக்கப்பட்டுள்ளது. 181 என்ற இந்த கட்டணமில்லா எண்ணுக்கு அழைத்து உதவி மையத்தில் பெண்களும் சிறார்களும் ஆலோசனை பெறலாம் என்றும் சங்கர் ஜிவால் கூறினார். 


சென்னையில் (Chennai) தொடங்கப்பட்டுள்ள உதவி மையம், பெண் வன்கொடுமை, வரதட்சணை கொடுமை, குழந்தை திருமணம் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண பிரத்யேகமாக துவக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். 


மேலும் இந்த மையத்தில் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு மருத்துவ உதவியும் வழங்கப்படும். இதுமட்டுமின்றி சென்னையில் உள்ள ரவுடிகள் பற்றிய கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சங்கர் ஜிவால் கூறினார்.


காலம் காலமாக நமது நாட்டில் பெண்களுக்கு எதிரான பல கொடுமைகள் நடந்துகொண்டு இருக்கின்றன. பல சட்டங்கள் போடப்பட்டாலும் இந்த கொடுமைகள் குறைவதாகத் தெரியவில்லை. சட்டங்கள் இன்னும் கடுமையானவையாக ஆக்கப்பட வேண்டும் என்றும் குற்றங்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள் தீவிரமாக இருக்க வேண்டும் என்றும் ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


ALSO READ:ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்த உண்மையை முதல்வர் விளக்க வேண்டும் : ஓ.பன்னீர்செல்வம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR