சென்னை: இன்று காலை 8 மணி நிலவரப்படி சென்னையில் (Chennai Corporation) மொத்தம் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 23,298 ஆக உயர்ந்துள்ளது. சென்னை மண்டலத்தில் எந்த பகுதியில் எத்தனை பேருக்கு கொரோனா தொற்று (Corona Positive) பாதித்துள்ளது என்பதைக் குறித்து பார்போம். சென்னை மாநகராட்சி தனது ட்விட்டர் பக்கத்தில், "சென்னையில் COVID-19 உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியலை பகிர்ந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதில் அதிகம் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது ராயபுரம். அங்கு 4023 பேருக்கு கொரோனா தொற்று (Coronavirus) உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் 3019 பேருக்கு என தண்டையார்பேட்டை உள்ளது. 


 



அதேபோல சென்னை மாநகராட்சி (Chennai Corporation) மண்டலத்தில் கொரோனாவால் அதிகம் இறந்தவர்களில் பட்டியலிலும் முதலிடத்தில் ராயபுரம் உள்ளது. இங்கு 46 பேர் இறந்துள்ளனர். அதேபோல திரு.வி.க.நகர் பகுதியில் 39 பேர் இறந்துள்ளனர். இது இரண்டாவது இடத்தில் உள்ளது.


 



 


Read | DMK MLA ஜெ.அன்பழகன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


நேற்று தமிழக சுகாதாரத்துறை (Health and Family Welfare Department) வெளியிட்ட அறிக்கையின் படி, நேற்று மற்றும் 1,562 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 33,229 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 286 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. சென்னை மண்டலத்தில் மொத்தம் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 23,298 ஆக உயர்ந்துள்ளது.


தமிழகத்தில் (Tamil Nadu) தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 33,229 ஆக அதிகரித்துள்ளது. அதில், 20,575 பேர் ஆண்கள். 12,637 பேர் பெண்கள் மற்றும் 17 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள். குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 17,527 ஆக உள்ளது. 15,413 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Read | வேலுமணியை vs கே.என்.நேரு: வீராப்புப் பேசுவது வீண் வம்பை விலைக்கு வாங்குவதற்குச் சமம்


இதுவரை 6,07,952 மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. அதில், இன்று 14,982 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது. இதுவரை, 5,80,768 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.