சென்னை: கொரோனா வைரஸின் கோர முகம் விலங்குகளையும் விட்டுவைக்கவில்லை. சென்னை வண்டலூர் பூங்காவில் கொரோனா வைரசுக்கு இரண்டாவது சிங்கம் பலியானது. பத்து நாட்களுக்கு முன் நீலா என்ற பெண் சிங்கம் பலியானது. இப்போது ஆண் சிங்கம் கோவிட் நோய்க்கு பலியானது


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சில நாட்களுக்கு முன்னர் சென்னை அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இருந்த 11 சிங்கங்களில் ஒன்பதுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இந்தியாவில் முதன்முறையாக விலங்குகளுக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.


சில தினங்களுக்கு முன்னதாக, கொரோனாவால் பாதிக்கபட்டிருந்த நீலா என்ற பெண் சிங்கம் திடீ¬ரென இறந்¬தது. அந்த சிங்¬கத்¬திற்கு மூக்¬கில் இருந்து திர-வம் போல் தொடர்ந்து சுரந்து வந்¬து-கொண்¬டி¬ருந்¬தது. உடனேயே சிங்கத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Also Read | COVID-19 vs Elephants: முதுமலை முகாமில் 28 யானைகளுக்கும் கொரோனா இல்லை


போபாலின் தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய்கள் நிறுவனம் (National Institute of High Security Animal Diseases (NIHSAD)) சிங்கங்களின் மாதிரிகளை பரிசோதித்தது.  தற்போது 12 வயதான ஆண் சிங்கம் கொரோனாவுக்கு இன்று (புதன்கிழமை, ஜூன் 16, 2021) காலை பலியானது. ஜூன் 3 ஆம் தேதி இந்த சிங்கத்துக்கு SARS-Cov-2 வைரஸ் பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. அப்போதிருந்து சிங்கத்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. 


பூங்காவில் இருந்த பதினொரு சிங்கங்களில் ஒன்பதுக்கு SARS-CoV-2 நோய்த்தொற்று இருப்பதாக ஜூன் 4 ஆம் தேதி மிருகக்காட்சிசாலை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. 


மிருகக்காட்சிசாலையின் சஃபாரி பார்க் பகுதியில் உள்ள அனிமல் ஹவுஸ் 1 இல் ஐந்து சிங்கங்கள் உள்ளன, அவற்றுக்கு பசியின்மை (anorexia) மற்றும் இருமல் இருந்தது. இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தை (Tamil Nadu Veterinary and Animal Sciences University (TANUVAS)) சேர்ந்தவர்களுடன் உயிரியல் பூங்காவில் கால்நடை குழுவும் இணைந்து உடனடியாக நடவடிக்கை எடுத்து சிகிச்சை அளித்தன.


Also Read | COVID-19: முதலில் வண்டலூர் சிங்கங்கள்; இப்பொழுது முதுமலை யானைகளா..!!


சென்னை உயிரியல் பூங்காவில் விலங்குகளுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிந்ததும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள யானைகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.  


தெப்பக்காடு முகாமில் உள்ள 28 காட்டு யானைகளுக்கும் கொரோனா தொற்று இல்லை என்று அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. யானைகளிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரிய வந்துள்ளதாக வனத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Also Read | Elephant family: 500 கி.மீ வீதியுலா வரும் சீனாவின் யானை மந்தைகள் Viral


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR