தற்போதைய கொரோனா பரவல் காலத்தில் உலகம் முழுவதும் சுற்றுலாவும், பயணங்களும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. சர்வதேச நாடுகளும் விமானச் சேவைகளையும் கட்டுப்படுத்தியுள்ளன. ஆனால், கொரோனாவைப் பார்த்து மனிதர்கள் தான் பயப்பட வேண்டும் என்று விலங்குகள் நினைக்கின்றன என்பதை நிரூபிக்க யானைகளின் நீண்ட பயணம் ஒன்று போதுமானதாக இருக்கும்.
சீனாவில், சுமார் 500 கிலோமீட்டர் தொடர்ந்து நடந்துவந்த யானைகள் சொல்லும் பாடம் இதுதானோ என்னவோ? கொரோனா வைரஸ் முதன்முதலில் தோன்றியதாக நம்பப்படும் சீனாவில் தான் இந்த அதிசயப் பயணமும் பதிவாகியிருக்கிறது.
சுமார் 500 கிலோமீட்டர் நிலப்பரப்பை 500 கிலோமீட்டர் நிலப்பரப்பை கடந்து வந்த யானை மந்தை ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அந்நாட்டு வரலாற்றில் முதன்முறையாக நடைபெற்ற நிகழ்வு இது என்று கருதப்படுகிறது நீண்ட நெடிய பயணத்தை மேற்கொண்டுள்ள யானைகள் ஓய்வெடுப்பதைக் காட்டும் காட்சிகள் வெளியாகி வைரலாகின்றன.
Also Read | பல மணி நேர மின் தடையினால் முடங்கும் பாகிஸ்தானின் கராச்சி நகரம்
யானைகளின் கூட்டம், குன்மிங் எனும் நகருக்கு அருகில் உள்ள வனப்பகுதியில் கூட்டமாகப் படுத்துக்கிடப்பது தெரிகிறது. இந்த மந்தை சீனாவின் யுன்னான் (Yunnan Province) மாகாணத்திக் இருந்து கிளம்பி, பிராந்தியத்தின் தலைநகரான குன்மிங்கைச் சுற்றியுள்ள பகுதிக்குச் சென்றுள்ளது,
15 யானைகளைக் கொண்ட அந்தக் கூட்டம், கடந்து வந்த பாதையில் இருந்த வயல்களில் தங்கள் மனம் போன போக்கில் பயிர்களை உண்டு அதகளம் செய்துவந்தன. 2020 மார்ச் மாதத்தில் 16 யானைகள் (elephants) தங்கள் பயணத்தை தொடங்கின. ஒரு யானைக்கு குழந்தை பிறந்ததால், தாயும் சேயும் மந்தையில் இருந்து பிரிந்துவிட்டன. எனவே குழுவின் எண்ணிக்கையை 15 ஆக குறைந்துவிட்டது.
ஆறு பெண் யானைகள், மூன்று ஆண் யானைகள், மூன்று குட்டி யானைகள், மூன்று களிறுகள் என 15 யானைகள்கொண்ட குழு அபூர்வ பயணத்தை தொடர்கின்றன. அந்த யானைகள் ஏன் தங்களுடைய வசிப்பிடத்திலிருந்து வெளியேறின என்பதற்கான காரணம் தெரியவில்லை. அவை எங்கு செல்கின்றன என்பதும் தெரியவில்லை.
Also Read | அனுஷ்கா-விராட் கோலி தம்பதிகளின் மகள் Vamikaவின் முதல் புகைப்படம்
அவற்றின் பயணம் உலகின் கவனத்தையே ஈர்த்துள்ளது. யானைகள் ஒன்றாக உறங்கும் ஒரு புகைப்படம் சீன சமூக ஊடகங்களில் 200 மில்லியனுக்கும் அதிகமானவர்களால் பார்த்து ரசிக்கப்பட்டுள்ளது பார்வைகளைப் பெற்றுள்ளது என்று அசோசியேட்டட் பிரஸ் (Associated Press) தெரிவித்துள்ளது.
அந்நாட்டு அதிகாரிகள் யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.யானைகள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் செல்வதைத் தடுக்கும் வகையில் சாலைகளில் கனரக வாகனங்கள் நின்ற வண்ணம் உள்ளன.
சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்களும் வெளியேற்றப்பட்டுள்ளனர். யானைகள் பயிர்களை சேதப்படுத்தாமல் இருக்க, ஆங்காங்கே அவற்றுக்கு உணவும் வைக்கப்படுகிறது.
Also Read | தமிழ்நாட்டில் COVID-19 பரவல் வேகம் குறைகிறது
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR