சென்னையில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டில் ஜூன் மாதம் மழை பெய்து வருகிறது.  தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள காரணத்தால் சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில், சில பகுதிகளில் வரலாறு காணாத அளவு மழை பெய்து வருகிறது.  சென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையின் அளவு குறித்து  இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஜூன் 20 திங்கட்கிழமையன்று, சென்னை தரமணியில் 11 செ.மீ மழையும், சென்னை விமான நிலையம், ஆலந்தூர் மற்றும் அண்ணா பல்கலைக்கழகப் பகுதிகளில் தலா 9 செ.மீ மழையும் பதிவாகியுள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | தாகத்தால் தவித்த ராஜ நாகம்; தண்ணீர் வழங்கிய கொடை வள்ளல்


மேலும் நுங்கம்பாக்கத்தில் 8 செ.மீ மழையும், சோழிங்கநல்லூரில் 7 செ.மீ மழையும், எம்ஜிஆர் நகர் மற்றும் அயனாவரம் தாலுகா அலுவலகத்தில் 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது என அந்த அறிவிப்பில் கூறப்பட்டு இருக்கிறது.  இதுதவிர இன்னும் மற்ற பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.  ஜூன் 21, செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி, சென்னை நுங்கம்பாக்கத்தில் 48.9 மி.மீ மழையும், மீனம்பாக்கத்தில் 30.9 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.  இந்திய வானிலை ஆய்வு மையத்தின் புள்ளிவிவரங்களின்படி, கடந்த 10 ஆண்டுகளில் பதிவான அதிகபட்ச மழை இந்த ஜூன் மாதத்தில் பெய்துள்ளது.  கடந்த 2016ம் ஆண்டு கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு முன்பு ஜூன் மாதத்தில் சென்னையில் பெய்த அதிகபட்ச மழையின் அளவு 53.2 ஆகும்.


மேலும் ஜூன் 21 ஆம் தேதி, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை மற்றும் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியது. தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியது.  ஜூன் 22 ஆம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  சென்னையில் அடுத்த 2 நாட்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


மேலும் படிக்க | படத்தில் ஒளிந்துள்ள பாம்பு உங்கள் கழுகு பார்வைக்கு தெரிகிறதா


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR