Viral Video: தாகத்தால் தவித்த ராஜ நாகம்; தண்ணீர் வழங்கிய கொடை வள்ளல்

கோடை காலம் என்றால் அனைவருக்கும் தாகம் அதிகம் ஏற்படும். மனிதர்கள் ஆனாலும் சரி விலங்குகள் ஆனாலும் சரி, கோடையில் தண்ணீர் இல்லாமல் வாடுவது மிக கொடுமையான ஒன்று.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 21, 2022, 02:20 PM IST
  • வெயில் காலத்தில் தாகம் தணிக்க தண்ணீர் மிகவும் அவசியம்.
  • தற்போது ராஜ நாகத்தின் வீடியோ ஒன்று மிகவும் வைரலாகி வருகிறது.
  • ராஜ நாகப்பாம்பு ஒன்று தரையில் படம் எடுப்பதை இந்த வீடியோவில் காணலாம்.
Viral Video: தாகத்தால் தவித்த ராஜ நாகம்; தண்ணீர் வழங்கிய கொடை வள்ளல் title=

இணைய உலகில், தினம் தினம், நகைச்சுவை, நடனம், வேடிக்கையான நிகழ்வுகள் போன்ற வீடியோக்கள் பகிரப்பட்டாலும், பாம்பு வீடியோக்கள் தான் எளிதில் வைரலாகும்.  அந்த வகையில் தற்போது ராஜ நாகத்தின் வீடியோ ஒன்று மிகவும் வைரலாகி வருகிறது. 

வெயில் காலத்தில் தாகம் தணிக்க தண்ணீர் மிகவும் அவசியம். இது மனிதர்கள் முதல் விலங்குகள் வரை அனைவருக்கும் அத்தியாவசிய தேவை. உலகிலேயே அதிக விஷமுள்ள பாம்பு இனமான ராஜ நாகத்தின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இதில் தாகத்தினால் தவிக்கும் ஒரு ராஜ நாகத்திற்கு ஒருவர் தண்ணீர் கொடுப்பதைக் காணலாம்.

58 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை இந்திய வன சேவை (IFS) அதிகாரி சுசாந்தா நந்தா ட்வீட் செய்துள்ளார். இதில், ' நாம் மிகவும் அன்பாகவும் பணிவாகவும் இருக்க வேண்டும், நமக்கும்  இந்த நிலை வரலாம்' என்று தலைப்பிட்டுள்ளார். 

மேலும் படிக்க | Viral Video: இரு தலைப்பாம்பிடம் சிக்கிய எலி; மனம் பதறச் செய்யும் கொடூர வீடியோ

ராஜ நாகப்பாம்பு ஒன்று தரையில் படம் எடுப்பதை  இந்த வீடியோவில் காணலாம். அதன் வாலை ஒருவர் பிடித்துக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில், ஒரு நபர் நாகப்பாம்பின் முன் நிற்கிறார். அவர் கையில் வைத்திருக்கும் கொக்கி போன்ற கம்யின் உதவியினால் உதவியுடன் நாகப்பாம்பின் தலையை தட்டி அதனை கட்டுப்படுத்த முயற்சிக்கிறார். முதலில் அவர் நாகப்பாம்பின் தலையில் சிறிது தண்ணீரை ஊற்றினார், அதன் காரணமாக அது அமைதியாகிறது. இதற்குப் பிறகு, அவர் நாகப்பாம்பின் வாய் அருகே தண்ணீர் பாட்டிலை கொண்டு செல்கிறார். மிகவும் தாகமாக இருக்கும் ராஜ நாகப்பாம்பு அமைதியாக தண்ணீர் குடிக்கத் தொடங்குவதையும் வீடியோவில் காணலாம்.

இந்த வீடியோ ட்விட்டரில் வெளியான உடனேயே பலரும் ரியாக்ட் செய்ய ஆரம்பித்தனர். இந்த நாகப்பாம்பு பாதுகாப்பான இடத்தில் விடுவிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று தான் நினைப்பதாக சிலர் எழுதினர். பல பயனர்கள் இந்த அதிகாரிகளை பாராட்ட வேண்டும் என்று கூறினர். தாகத்திற்கு தண்ணீர் கொடுப்பதும் நல்ல விஷயம் தான் என்றனர் சிலர். பாம்புகளின் மிகவும் ஆபத்தான மற்றும் விஷத்தன்மை கொண்ட பாம்புகளில் ஒன்று ராஜ நாகம் என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோவை இங்கே காணலாம்: 

மேலும் படிக்க | Viral Video: பாம்பு என்றால் படை தான் நடுங்கும்... நான் இல்லை; வீர மங்கையின் சாகசம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News