சென்னை உயர்நீதிமன்றத்தின் வாயில்கள் ஆண்டுக்கு ஒருமுறை மூடப்படுவது ஏன்? பின்னணி
சென்னை உயர் நீதிமன்றத்தில் அனைத்து வாயில்களும் இன்றிரவு முதல் நாளை இரவு வரை மூடப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் பதிவாளர் அறிவித்துள்ளார்.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஜார்ஜ் டவுன், பாரிமுனை, பூக்கடை பகுதிகளுக்கு நடுவில் உயர் நீதிமன்றம் கட்டப்பட்டதால் இப்பகுதிகளில் வசித்த மக்கள் உயர்நீதிமன்றத்தை சுற்றி செல்ல வேண்டிய நிலை உருவானது. நாளடைவில் அது அதிக தூரமாக கருதி உயர் நீதிமன்ற வளாகத்தை வழிப்பாதையாக பயன்படுத்த தொடங்கினர்.
மேலும் படிக்க | சமாளிக்க தயாராக இருங்கள் - கனமழை குறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு உத்தரவு
இதை கவனத்தில் கொண்ட நீதிமன்ற நிர்வாகம், மக்கள் வருங்காலங்களில் நீதிமன்ற வளாக வழிப்பாதைகளை உரிமைகோரி விடக்கூடாது என்பதற்காக நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களும் வருடத்தில் ஒரு நாள் மக்கள் பயன்படுத்த முடியாத வகையில் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நடைமுறை ஒவ்வொரு வருடமும் கடைப்பிடிப்பது வழக்கம். அதன்படி இன்று (19/11/2022) இரவு 8 மணி முதல் நாளை (20/11/2022) இரவு 8 மணி வரை சென்னை உயர் நீதிமன்றத்தின் அனைத்து நுழைவு வாயில்களும் மூடப்படுகிறது. இந்த நேரத்தில் வழக்கறிஞர்கள், பொதுமக்கள் என யாருக்கும் நீதிமன்றத்தில் நுழைய அனுமதி இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் பதிவாளர் அறிவித்துள்ளார்.
மேலும் படிக்க | 7 பேர் விடுதலை... மத்திய அரசின் மறுசீராய்வு மனுவுக்கு நாராயணசாமி வரவேற்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ