சென்னை: கேரளாவை (Kerala) சேர்ந்த பாத்திமா லத்தீப் (Fathima Latheef) என்ற மாணவி சென்னை ஐஐடி-யில் (Indian Institute of Technology Madras) முதலாமாண்டு முதுகலை பிரிவில் படித்து வந்த நிலையில், அவர் கல்லூரி வளாகத்திலேயே தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி மற்றும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த வழக்கு சம்பந்தமாக தமிழக காவல் துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் மாணவி பாத்திமா லத்தீப் மரணம் குறித்து சிபிஐ விசாரணை உத்தரவிட வேண்டும் என இந்திய தேசிய மாணவர் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை இன்று விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதி, சிபிஐ விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் இந்த வழக்கில் தமிழக அரசு விருப்பபட்டால், சிபிஐ விசாரணை மேற்கொள்ளலாம் எனவும், சிபிஐ விசாரணை கோரிய மனுவில் போதிய ஆவண ஆதாரங்கள் இல்லாததால், இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம். மேலும் மெட்ராஸ் ஐ.ஐ.டி கல்லூரி தனது மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்க வேண்டும் எனவும் நீதிபதிகள் சத்தியநாரயணன், சேஷசாயி அமர்வு தனது உத்தரவில் தெரிவித்துள்ளனர்.


முன்னதாக நவம்பர் மாதம் 9 ஆம் தேதி கேரளாவை சேர்ந்த பாத்திமா லத்தீப் என்ற மாணவி சென்னை ஐஐடி கல்லூரி வளாகத்திலேயே தற்கொலை செய்து கொண்டார். மதரீதியான துன்புறத்தல் காரணமாக தான் மாணவி தற்கொலை செய்துக்கொண்டார் என கூறப்பட்டது. அதுக்குறித்து விசாரணையில் தமிழக காவல் துறை ஈடுபட்டுள்ளது. சென்னை ஐஐடி கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என பலரிடம் காவல் துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. மாணவியின் தற்கொலைக்கு உண்மையான காரணம் என்னவென்று விரைவில் தெரிய வரும் என காவல்துறை அதிகாரி கூறியிருந்தனர். 


ஆனால் இந்திய தேசிய மாணவர் சங்கம் தரப்பில், சென்னை ஐஐடி கல்லூரியில் இதுபோன்ற மரணங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. தற்போது பாத்திமாவும் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். அவர் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதால், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது