கடந்த (2002-03) முதல் (2006-07) வரையிலான ஆறு நிதியாண்டுகளுக்கும், (2009-10)ஆம் நிதியாண்டுக்கும் வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்யவில்லை எனவும், வருமான வரியாக 7 கோடியே 57 லட்சம் ரூபாய் செலுத்த வருமான வரித்துறை சார்பில் இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


இந்த நோட்டீசை எதிர்த்து எஸ்.ஜே.சூர்யா தாக்கல் செய்த மனுக்களை வருமான வரித் தீர்ப்பாயம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து எஸ்.ஜே. சூர்யாவுக்கு எதிராக வருமான வரித்துறை சார்பில் 2015ம் ஆண்டு ஆறு வழக்குகள் தொடரப்பட்டன. 


சென்னை எழும்பூர் அல்லிகுளம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி எஸ்.ஜே.சூர்யா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்கள் நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன் விசாரணைக்கு வந்த போது, குறிப்பிட்ட நிதியாண்டுகளின் வருமான வரிக் கணக்குகள் மறுமதிப்பீடு நடைமுறைகள் நிலுவையில் உள்ள நிலையில், இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் அவற்றை ரத்து செய்ய வேண்டும் என்று எஸ்ஜே சூர்யா தரப்பில் வாதிடப்பட்டது.



வருமான வரித் துறை தரப்பில் முறையான சோதனை நடத்தி வருமானத்தை மறைத்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்துதான் இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பல முறை நோட்டீஸ் அனுப்பியும் வருமான வரி கணக்குத் தாக்கல் செய்யாததால் எஸ்.ஜே சூர்யா இந்த வழக்குகளை எதிர்கொள்ள வேண்டும் எனக் கூறி வழக்கை ரத்து செய்யக் கோரிய அவரது மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 



மேலும் படிக்க | அடுத்தடுத்து 3 நடிகைகள் தற்கொலை! கொல்கத்தாவில் தொடரும் மர்மங்கள்


மேலும், வருமானவரித் துறையின் விசாரணையும் குற்ற வழக்கு விசாரணையும் ஒரே நேரத்தில் மேற்கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளதாக சுட்டிக்காட்டிய நீதிபதி, மறுமதிப்பீடு நடவடிக்கை என்பது குற்ற வழக்கு தொடர்வதற்கு எந்த விதத்திலும் தடையாக இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.


மேலும் படிக்க | அண்ணாச்சி படத்துக்காக களமிறங்கும் 10 கதாநாயகிகள் - பிரம்மாண்ட இசைவெளியீட்டு விழா


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR